Jun 20, 2024
ஆப்பிள் சீடர் வினிகரில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி உள்ளது. சமையலுக்கு முக்கியமாக பயன்படுத்தப்படும் ஆப்பிள் சீடர் வினிகரில் ஏராளமான அழகு நன்மைகளும் உள்ளது. அதை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்
Image Source: istock
இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் அமிலங்கள் ஆகியவை, சருமத்தை மென்மையாதாக மாற்றக்கூடும். மேலும், ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள், சரும மேற்பரப்பில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற உதவக்கூடும்
Image Source: istock
ஆப்பிள் சீடர் வினிகர் உச்சந்தலையில் வளரும் ஈஸ்டின் அளவை குறைத்து பொடுகுத் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைத்திட உதவி புரிகிறது
Image Source: istock
இது சருமத்தில் அழுக்கு மற்றும் அதிக எண்ணெய் படிதலை நீக்க உதவுகிறது. மேலும், கோடுகள் மற்றும் சுருக்கங்களை போக்கி மிகவும் மென்மையானதாக உணர வைக்கக்கூடும்
Image Source: pexels-com
இதில் மூன்று வகையான பாதுகாப்பு கவசம் உள்ளது. அதன் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டிவைரல் கலவை, சருமத்தில் முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்க பயன்படுகிறது
Image Source: istock
ஆப்பிள் சீடர் வினிகர் கிருமி நாசினி பண்புகளை கொண்டுள்ளது. அதனை தொடர்ச்சியான நுகர்வு, பாக்டீரியாக்களை கட்டுப்படுத்துவதோடு தோலில் அடிக்கும் துர்நாற்றத்தை குறைத்திட செய்திடும்
Image Source: istock
ஆப்பிள் சிடர் வினிகர் சருமத்தின் pH அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. இதனால், சூரியனின் கதிர்வீச்சால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுத்திட முடிகிறது
Image Source: istock
ஆப்பிள் சீடர் வினிகரை நேரடியாக குடிக்கக்கூடும். அதை தண்ணீரில் மிக்ஸ் செய்து தான் அருந்த வேண்டும். 1 அல்லது 2 டீஸ்பூன் குடித்தால் போதுமானது ஆகும். இதனை சருமத்தில் நேரடியாக அப்ளை செய்யக்கூடாது
Image Source: istock
உணவுக்கு முன்பு ஆப்பிள் சீடர் வினிகரை குடிப்பது, செரிமானத்தை மேம்படுத்தவும், ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும் உதவுகிறது. இதனை காலையில் குடிப்பது உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கக்கூடும்
Image Source: istock
Thanks For Reading!