Jul 6, 2024
By: Nivethaஆயிரம் என்னும் சொல்லுக்கு 'K' என்னும் வார்த்தை பயன்படுத்துவதற்கு என்ன காரணம் என்று கேட்டால், மேற்கத்திய நாடுகளின் தாக்கம் தான் அது என்று பலரும் கூறுகிறார்கள்.
Image Source: pixabay
சமீபகாலங்களில், சமூக வலைத்தளங்களிலும், இணையத்தளத்திலும் ஆயிரம் என்பதற்கு 'K' என்னும் எழுத்தை தான் பயன்படுத்துகிறார்கள். அதற்கான காரணம் என்னவென்பதை தான் இப்பதிவில் நாம் காணவுள்ளோம்.
Image Source: pixabay
பொதுவாக மில்லியன் என்று வார்த்தைக்கு 'M' என்றும், பில்லியன் என்ற வார்த்தைக்கு 'பி' என்றும் கூறுகிறார்கள்.
Image Source: istock
ஆனால் ஆயிரம் அதாவது ஆங்கிலத்தில் 'Thousand' என்பது குறிக்க மட்டும் ஏன் 'K' என்னும் எழுத்தை பயன்படுத்துகிறார்கள்.
Image Source: pixabay
கிரேக்கம் மற்றும் ரோமன் கலாசார தாக்கத்தை தான் அதிகளவு நமது மேற்கத்திய நாடுகள் பின்பற்றுகிறது. அந்த வகையில் 'K' என்னும் எழுத்தின் பயன்பாட்டிற்கும் மூலம் அங்கு தான் உள்ளது.
Image Source: istock
கிரேக்க மொழியில் ஆயிரம் என்பதை 'Chilioi' என்று கூறுவார்களாம். காலப்போக்கில் பிரஞ்சுக்காரர்களால் அந்த வார்த்தை சுருக்கப்பட்டு 'கிலோ' என்று அழைக்கப்பட்டது. இதன் பின்னர் தான் கிலோ மீட்டர், கிலோ கிராம் உள்ளிட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது.
Image Source: pixabay
அந்த கிலோ என்னும் வார்த்தைக்கு தான் 'K' என்னும் குறியீடு அளிக்கப்பட்டது
Image Source: unsplash
எப்படி மில்லியன், பில்லியன் போன்ற வார்த்தைக்கு ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தான 'B' மற்றும் 'M' பயன்படுத்தப்படுகிறதோ அதே போல் ட்ரில்லியன் என்னும் வார்த்தைக்கு 'T' என்று கூறப்படுகிறது. அதனால் தான் ஆயிரத்திற்கு 'T' குறியீடு பயன்படுத்துவதில்லை.
Image Source: pexels
பலருக்கும் இந்த சந்தேகம் இருந்து வரும் நிலையில், தற்போது இந்த பதிவின் மூலம் பலரும் தெளிவடைந்து, புரிதல் ஏற்பட்டிருக்கக்கூடும்.
Image Source: Samayam Tamil
Thanks For Reading!