[ad_1] ​ஆரோக்கியமளிக்கும் சுவையான நெல்லிக்காய் மோர் - செய்வது எப்படி ?

Jun 14, 2024

BY: Nivetha

​ஆரோக்கியமளிக்கும் சுவையான நெல்லிக்காய் மோர் - செய்வது எப்படி ?

​நெல்லிக்காய் மோர்

சுட்டெரிக்கும் கோடை காலத்தில் தாக்கத்தை தணிப்பதோடு ஆரோக்கியமும் பெற வேண்டுமெனில் சுவையான இந்த நெல்லிக்காய் மோரை வீட்டிலேயே தயார் செய்து குடியுங்கள். இது ஒரு சிறந்த கோடைக்கால பானமாகும்.

Image Source: istock

​தேவையான பொருட்கள்

ஒரு கப் கெட்டி தயிர், 2 பெரிய நெல்லிக்காய், 1 டீஸ்பூன் சீரகம், ப.மிளகாய் 1, கறிவேப்பிலை சிறிதளவு, 1 துண்டு தோல் நீக்கிய இஞ்சி, உப்பு, பெருங்காயத்தூள்.

Image Source: unsplash-com

செய்முறை

1 கப் கெட்டி தயிரை மிக்சி ஜாரில் போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து எடுத்து வேறு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்.

Image Source: pexel-com

​நெல்லிக்காய்

இந்த மோருக்கு முக்கியமான பெரிய நெல்லிக்காய்களை எடுத்து கொட்டையினை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

Image Source: pexel-com

​மிக்சியில் அரைக்கவும்

பின்னர் நறுக்கிய நெல்லிக்காய், ப.மிளகாய்-1, கறிவேப்பிலை, 1 துண்டு இஞ்சி, 1 ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டு 1/4கப் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

Image Source: istock

​மோர் கலவை

ஏற்கனவே நாம் அரைத்து வைத்துள்ள மோர் கலவையோடு மிக்சியில் அரைத்து எடுத்த கலவையையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கிண்டி விடவும்.

Image Source: pexel-com

​உப்பு மற்றும் பெருங்காயத்தூள்

அதில் தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

Image Source: unsplash

​மோர் ரெடி

மோர் கலவையினை ஒரு டம்ளரில் ஊற்றி கறிவேப்பிலையினை சிறிது சிறிதாக கிள்ளி மேலே தூவி விடவும். அவ்வளவு தான் சுவையான நெல்லிக்காய் மோர் தயார்.

Image Source: unsplash

குழந்தைகள் பருகலாம்

தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகளை போட்டு கொள்ளலாம். இந்த மோர் குழந்தைகளுக்கு பருக கொடுப்பது மிகவும் நல்லது.

Image Source: pexel

Thanks For Reading!

Next: இந்தியாவின் சிறந்த 'மட்டன் கிரேவி ' சாப்பிட்டு பாருங்க!

[ad_2]