Jul 3, 2024
ஆலமரத்தின் அடியில் அமர்ந்தால் இயற்கையாகவே மன அமைதி ஏற்படும், தியானம் செய்ய ஏற்ற இடமாகும். இம்மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் ஞானம் பிறக்கும் என்றும் கூறுவார்கள்
Image Source: pexels
ஆலமரத்தின் பழுத்த கனிகளை நிழலில் உலர்த்தி சாப்பிட்டு வந்தால் உடல் எடை பராமரிக்கப்படுவதோடு, ஞாபக சக்தியும் மேம்படும். இந்த கனிகளை 12 கிராம் அளவில் பாலுடன் கலந்து குடித்தால் இந்திரியம் திடப்படும். மேலும் இது சரும பளபளப்பினை ஏற்படுத்தக்கூடும் என்பதால் சோப்பு தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
Image Source: istock
இந்த கனிகளை உலர்த்தி எடுத்து அரைத்து பொடியாக்கி அதன் சமமான அளவு சர்க்கரை சேர்த்து 5 கிராம் அளவில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் சிறுநீர்ப்பை சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்.
Image Source: istock
ஆலமர பூ காம்புகளை அத்தி மர பட்டையோடு சேர்த்து அரைத்து பவுடராக்கி கொள்ளுங்கள். இந்த பவுடரை சம அளவில் சர்க்கரை சேர்த்து பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
Image Source: pixabay
ஆலமர விழுதுகளின் மேற்புறத்தில் காணப்படும் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தினை கொண்ட பகுதிகளை எடுத்து அரைத்து மார்பகங்கள் மீது பூசினால் வளர்ச்சிப்பெறும், தளர்ச்சியான மார்பகங்கள் சீர்படவும் இது உதவும்.
Image Source: pixabay
ஆலமரத்தின் வேர்பட்டையினை சுமார் 12 கிராம் அளவில் எடுத்து அதனை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு கஷாயமாக்கி குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும், சீதபேதியும் சரியாகும் என்று கூறப்படுகிறது.
Image Source: pixabay
ஆலமர இலைகளை நிழலில் காயவைத்து அரைத்து பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலத்தில் அதிகளவு ரத்த போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.
Image Source: istock
ஆலமரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பால் வடியும். இந்த பாலானது காது, மூக்கு, பல் உள்ளிட்டவைகளை சார்ந்த நோய்களையும், மூலம் மற்றும் அதனால் ஏற்படும் வலி ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
Image Source: pixabay
ஆலமரத்தின் பால் மற்றும் எருக்கம் செடியில் கிடைக்கும் பாலினையும் சம அளவில் சேர்த்து புண்கள் மீது தடவி வந்தால் புண்கள் சீக்கிரம் ஆற துவங்கும்.
Image Source: pexels
Thanks For Reading!