[ad_1] ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் கம்மங்கூழ்

Aug 6, 2024

ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் கம்மங்கூழ்

Nivetha

கம்பு

சிறுதானிய வகைகளிலேயே அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்தது என்றால் அது கம்பு தான். இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அள்ளிக்கொடுக்கிறது. நெல் அரிசியில் இருப்பதை விட கம்பில் சுமார் 8 மடங்கு இரும்புசத்து அதிகம் என்று கூறப்படுகிறது.

Image Source: istock

கம்மங்கூழ்

இந்த கம்பினை கொண்டு கூழ் செய்து சாப்பிடுவது அவ்வளவு நல்லது. இதனை வாரம் ஒருமுறையாவது நாம் சாப்பிட்டு வரும் பட்சத்தில் ரத்த சோகை பிரச்சனை குணமாகும். கம்பு நமது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. அதனால் கோடைக்காலத்தில் இந்த கூழை அவசியம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

Image Source: istock

உடல் எடை

கம்மங்கூழை சாப்பிட்டால் அதிக நேரம் பசி எடுக்காமல் நிறைவான உணர்வினை கொடுக்கும். அதனால் உங்கள் எடை அளவு நிர்வகிக்கப்படும். நீரிழிவு நோயாளிகள் தங்களது ரத்த சர்க்கரை அளவினை குறைக்க இதனை காலை உணவாக எடுத்து கொள்ளலாம்.

Image Source: pixabay

இதய நோய் அபாயம்

கம்மங்கூழை தினசரி உணவில் சேர்த்து கொள்ளும் பட்சத்தில் நமது உடலில் இருக்கும் ட்ரைகிளிசரைடு அளவை குறைக்கிறது. இதன் மூலம் ரத்தத்தின் அடர்த்தியும் குறைக்கப்பட்டு பக்கவாதம், இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படும் அபாயமும் குறைகிறது.

Image Source: istock

நார்சத்து

கம்மங்கூழில் அதிகளவு நார்சத்து உள்ளது, இது செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் உள்ளிட்டவைக்கு தீர்வளிக்கும். மேலும், குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும், புற்றுநோய்கள் அதிலும் குறிப்பாக குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

Image Source: istock

மாதவிடாய் பிரச்சனை

கம்மங்கூழை முடிந்தளவு அடிக்கடி உட்கொள்ளும் பட்சத்தில் பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம். அக்காலத்தில் ஏற்படும் வயிறு வலி, வயிற்று பிடிப்பு போன்ற தொந்தரவுகள் நீங்கும்.

Image Source: istock

அல்சர்

கம்மங்கூழை தினசரி சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி பிரச்சனை நீங்கும், மேலும் வயிற்று புண், அல்சர் உள்ளிட்டவை ஏற்படாமல் தடுக்கும். இதில் கார்போஹைட்ரேட் அதிகமுள்ளதால் செரிமானம் மெதுவாக நடைபெறவும் உதவுகிறது.

Image Source: istock

உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கம்மங்கூழை தினமும் சாப்பிட்டு வந்தால் அதிலிருக்கும் அதிகளவிலான பொட்டாசியம், நமது உடலில் இருக்கும் அளவுக்கு அதிகமான சோடியத்தை வெளியேற்ற உதவும். இதன் காரணமாக உயர் ரத்த அழுத்தம் குறைந்து கட்டுக்குள் இருக்கும்.

Image Source: istock

எலும்புகள் வலுப்பெறும்

கம்பில் அதிகளவு பாஸ்பரஸ் இருக்கிறது, இது எலும்புகளை வலுப்பெற செய்கிறது, ரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளை நிர்வகிக்கிறது. மேலும் இது சீக்கிரம் செரிமானமாகக்கூடியது என்பதால் குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.

Image Source: pexels

Thanks For Reading!

Next: குடல் ஆரோக்கியத்தை பராமரித்து பாதுகாக்கும் சேப்பங்கிழங்கு

[ad_2]