[ad_1] ஆல்கஹாலின் தாக்கத்தை குறைக்க ‘மதுவுடன்’ இதை சேர்த்து சாப்பிடுங்கள்!

Jun 25, 2024

ஆல்கஹாலின் தாக்கத்தை குறைக்க ‘மதுவுடன்’ இதை சேர்த்து சாப்பிடுங்கள்!

mukesh M

மதுவுடன் உட்கொள்ள வேண்டிய பொருட்கள்!

மதுபான நுகர்வால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில், மதுபானம் பருகும் போது அதனுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு பொருட்கள் என்னென்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!

Image Source: istock

சாலட்!

பழங்கள் மற்றும் காய்கறிகளின் கலவையில் தயார் செய்யப்படும் சாலட்கள், மதுபானப் பருகுவதால் உண்டாகும் அழற்சிகளை தடுக்க உதவுகிறது. குறிப்பாக பெர்ரி பழங்கள் அதிகம் சேர்க்கப்பட்ட சாலட்கள், சீரான குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.

Image Source: istock

நட்ஸ் வகைகள்!

பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட்ஸ் உள்ளிட்ட நட்ஸ் வகைகளை நம் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, புரதம், ஆரோக்கிய கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளது. இந்த ஊட்டச்சத்து கலவை ஆனது, ஆல்கஹால் தாக்கத்தை குறைக்க உதவுகிறது.

Image Source: istock

வெண்ணெய் பழம்!

ஆரோக்கிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்த வெண்ணெய் பழம், ஆலிவ் விதை ஆகியவற்றை மதுபானத்துடன் சேர்த்து எடுத்துக்கொள்வது, மது பானம் பருகுவதால் உண்டாகும் நீரிழப்பை தடுப்பதோடு, இதயம் மற்றும் குடல் ஆரோக்கியம் காக்கவும் உதவுகிறது.

Image Source: pexels-com

லீன் புரதங்கள்!

லீன் புரதங்களின் நுகர்வு மதுவுக்கு பின் அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. அந்த வகையில் லீன் புரதங்கள் நிறைந்த பருப்பு வகைகள், சிக்கன், பீன்ஸ், மீன்கள் போன்றவற்றை மதுவுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.

Image Source: istock

முழு தாணியங்கள்!

இன்சுலின் உணர்திறனை மேலாண்மை செய்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் பண்பு முழு தாணியங்களில் காணப்படுகிறது. ஆக, ஓட்ஸ், பழுப்பு அரிசி, குயினோ, கோதுமை போன்ற முழுதாணியங்களை மதுவுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.

Image Source: istock

புளிக்க வைத்த உணவுகள்!

குடல் ஆரோக்கியம் காப்பதில் இந்த புளிக்க வைத்த உணவுகளின் பங்கு இன்றியமையாதது. எனவே, தயிர், கிம்சி, கெஃபிர் போன்ற ப்ரோ பையோட்டிக்ஸ் நிறைந்த புளித்த உணவுகளை மதுவுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள ஆல்கஹாலின் பாதிப்புகள் குறையும்.

Image Source: istock

முட்டை!

புரதம் நிறைந்த முட்டையின் நுகர்வு ஆனது மதுவின் பின் உண்டாகும் மயக்கத்தை தவிர்க்க உதவுகிறது. மேலும், ஆல்கஹால் நுகர்வால் உண்டாகும் கல்லீரல் அழற்சி - தடிப்பு போன்ற அபாயத்தின் வாய்ப்புகளையும் குறைக்கிறது.

Image Source: istock

தண்ணீர்!

மது பானம் நுகர்வால் உண்டாகும் நீரிழப்பு மற்றும் அது தொடர்பான ஆரோக்கிய சிக்கல்களை தடுக்கும் பண்பு தண்ணீருக்கு உள்ளது. எனவே, முடிந்தளவுக்கு அதிகமாக இந்த தண்ணீரை மதுவுடன் சேர்த்து உட்கொள்வது நல்லது!

Image Source: istock

Thanks For Reading!

Next: மது அருந்துவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!

[ad_2]