Aug 20, 2024
BY: Anoj, Samayam Tamilசம்மந்தி என்பது கேரளாவில் மிகவும் பிரபலமான தேங்காய் சட்னி ஆகும். இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். அதனை எப்படி செய்வது என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்
Image Source: istock
தேங்காய் - 1 கப்; வர மிளகாய் - 4; சின்ன வெங்காயம் - 5; கடுகு - 1 டீஸ்பூன் ; கறிவேப்பிலை - சிறிதளவு; புளி- எலுமிச்சை சைஸ் ; உப்பு - சுவைக்கேற்ப; மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்; தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
Image Source: istock
முதலில் தேங்காயை நன்றாக துருவி, மிக்ஸி ஜாருக்கு மாற்றிக்கொள்ளவும்
Image Source: istock
அடுத்து, வர மிளகாய், புளி, கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பை மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்
Image Source: istock
பிறகு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலவையை நன்றாக அரைத்துகொள்ளவும்
Image Source: pexels-com
வழக்கமான முறையில் கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். அடுப்பை மிதமான நெருப்பில் வைத்துகொள்ளவும்
Image Source: istock
எண்ணெய் காய்ந்ததும் கடுகை சேர்த்து தாளித்துவிட்டு, வர மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். கொஞ்சம் மிளகாய் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கிகொள்ளலாம்
Image Source: istock
இறுதியாக, மிக்ஸியில் அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்
Image Source: istock
கலவை கொதிநிலைக்கு வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கிவிடலாம். அதனை இட்லி அல்லது தோசையுடன் பரிமாற செய்யலாம்
Image Source: istock
Thanks For Reading!