[ad_1] இட்லி மாவை வைத்து இத்தனை வகை டிஷ் பண்ணலாமா?

Jun 11, 2024

இட்லி மாவை வைத்து இத்தனை வகை டிஷ் பண்ணலாமா?

Mohana Priya

மசாலா இட்லி​

வழக்கமாக செய்யும் இட்லி போல் இல்லாமல் சில மசாலா, காய்கறிகள், இட்லி பொடி சேர்த்து மசாலா இட்லி செய்து வித்தியாசமாக கொடுக்கலாம்.

Image Source: iStock

இட்லி உப்புமா​

இட்லி மீதமாகி விட்டால் அவற்றை உதிர்த்து, கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளித்து, வேண்டிய காய்கறிகளை பொடிய நறுக்கி சேர்த்து, காய்கறி வெந்ததும், உதிர்த்து வைத்த இட்லியை சேர்த்து கிளறினால் இட்லி உப்புமா ரெடி.

Image Source: iStock

​பனியாரம்

தேவையான அளவு இட்லி மாவினை எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி, வாணெலியில் எண்ணெய், கடுகு, உளுந்து தாளித்து, வெங்காயம், மிளகாய், காய்கறிகள் சேர்த்து வதக்கி, இந்த கலவையை மாவுடன் சேர்த்து, பனியார குழிகளில் ஊற்றி எடுக்கலாம்.

Image Source: iStock

ஊத்தாப்பம்

தோசை கல்லில் இட்லி மாவை சிறிது அளவு மட்டும் பரப்பி, அதன் மீது இட்லி பொடி, பொடியாக நறுக்கிய வெங்காயம், காய்கறிகள் என எது வேண்டுமோ தூவி, வேகவிட்டு எடுத்தால் ஊத்தாப்பம் ரெடி.

Image Source: iStock

முட்டை பனியாரம்

இட்லி மாவுடன் வெல்லம் சேர்த்து இனிப்பு பனியாரமாகவோ அல்லது முட்டை, காய்கறிகள் சேர்த்து முட்டை பனியாரமாகவோ சுவைக்க ஏற்ப செய்து கொள்ளலாம்.

Image Source: Samayam Tamil

தோசை

இட்லி மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி, தேசை கல்லில் வார்த்து எடுத்தால் மொறு, மொறு தோசை ரெடி.

Image Source: iStock

ஆப்பம்

சற்று கூடுதலாக தண்ணீர் சேர்த்து இட்லி மாவை கலக்கி, கடாயில் ஊற்றி எடுத்து, குழம்பு அல்லது தேங்காய் பாலுடன் சாப்பிட சுவையான ஆப்பம் ரெடி.

Image Source: iStock

ஸ்டப்பிங் இட்லி

வழக்கமாக இட்லி ஊற்றுவது போல் தட்டில் மாவை ஊற்றி, ஒவ்வொரு இட்லியின் மத்தியிலும் கோழிக்கறி, மட்டன் கறி, உருளைக்கிழங்கு மசால் என வித விதமான ஸ்டப்பிங் வைத்தோ அல்லது சட்னி வகைகளை கொஞ்சம் சேர்த்தால் ஸ்டப்பிங் இட்லி தயார்.

Image Source: iStock

பிரைடு இட்லி

குழந்தைகள் இட்லி சாப்பிட அடம் பிடித்தால், இட்லியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மசாலா சேர்த்து எண்ணெய்யின் பொறித்து கொடுத்தால் பிரைடு இட்லி ரெடி.

Image Source: iStock

Thanks For Reading!

Next: கேரள மக்கள் விரும்பி சாப்பிடும் 'முட்டை சம்பந்தி' செய்முறை

[ad_2]