Jul 16, 2024
By: Anojமை டாக்கிங் டாம், மை டாக்கிங் ஏஞ்சல் கேம்மை உருவாக்கியவரின் அடுத்த படைப்பான My Talking Hank: Islands, சாகசம் நிறைந்த ஆண்ட்ராய்டு கேம்மாகும். இதனை எப்படி ஈஸியாக விளையாடலாம் என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: playstore-com
தீவை சுற்றிப்பார்க்கையில் பல அரிய பொருட்கள் கண்ணில் படக்கூடும். அவற்றில் காயின்ஸ், Medipack போன்ற விஷயங்கள் இருக்க செய்யலாம். நடந்து செல்ல விரும்பாதோர் ஸ்கூட்டரிலும் பயணிக்க செய்யலாம்
Image Source: playstore-com
கேமின் கதாபாத்திரத்தை முறையாக பராமரிக்க வேண்டும். அவற்றை ஒருபோதும் பசியில் விடக்கூடாது. ட்ரீ ஹவுஸில் உள்ள கிச்சனில் உணவை சமைத்து சாப்பாடு ஊட்ட வேண்டும். பிறகு, பாத்ரூம் அழைத்து செல்வது என அனைத்து விஷயங்களிலும் ஈடுபட வேண்டும்
Image Source: playstore-com
இந்த கேமில் பிற விலங்குகளுடன் நட்புறவை வளர்க்க செய்யலாம். மேப்பில் காண்பிக்கும் பிக்சரை டச் செய்து பேசலாம். சில நேரம் அதன் அருகேயுள்ள பட்டன் நிறமாறினால், உணவு அளிப்பது போன்ற செயலில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை உண்டாகும்
Image Source: playstore-com
சூரியன் மறைந்தப்பிறகு கதாபாத்திரத்தின் ஆற்றல் அளவு குறைந்தாலும், தூங்க வேண்டிய அவசியம் கிடையாது. இருட்டிலும் தாராளமாக தீவை சுற்றி வரலாம். சில அரிய பொருட்கள் இரவு நேரத்தில் மட்டுமே தென்படக்கூடும்
Image Source: playstore-com
ஸ்டிக்கர் ஆல்பம் முடிப்பதும் கேமின் ஒரு பகுதியாகும். மொத்தம் 6 ஸ்டிக்கர் ஆல்பம் உள்ளது. திரையில் இருக்கும் ஸ்டிக்கர் பேக்கை அவ்வப்போது செக் செய்யுங்கள். இதுதவிர, விளம்பரங்கள் பார்ப்பது, பிற டாஸ்க் முடிப்பது மூலமும் ஸ்டிக்கர் ஆல்பத்தை பெற முடியும்
Image Source: playstore-com
கேமின் கதாபாத்திரம் தங்கும் மர வீட்டை அழகுப்படுத்த செய்யலாம். உங்களுக்கு பிடித்த பெயிண்டை அறைக்கு அடிக்கலாம். இதுதவிர, 5 விதமான தீம் உள்ளது. ஒவ்வொரு தீமிலும் பல வகையான பொருட்கள் மற்றும் அலங்காரங்கள் இருக்கக்கூடும்
Image Source: playstore-com
இந்த கேமிற்குள் மினி கேம்ஸ் விளையாடும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரத்தின் பெட்ரூமில் கேமிங் கன்சோலை காண முடியும். அதேபோல், பிற விலங்குகளை சந்திக்க செல்கையிலும் மினி கேமஸ் விளையாடும் வாய்ப்பு கிடைக்கக்கூடும்
Image Source: playstore-com
டிவி பார்ப்பது Hank கதாபாத்திரத்தின் ஃபேவரைட் பொழுதுப்போக்கு ஆகும். ஆனால், மர வீட்டில் டிவி கிடையாது. வீட்டிற்கு அருகேயுள்ள கடற்கரையில் Open Theatre வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு திரையில் வரக்கூடிய படங்களை காண செய்யலாம்.
Image Source: playstore-com
Thanks For Reading!