Anoj, Samayam Tamil
Aug 19, 2024
90ஸ் கிட்ஸை தாண்டி 2k கிட்ஸூக்கும் Shroov என்ற BGM மூலம் பரிட்சையமான முகமாக மாறிய நடிகர் கரணுக்கு இன்று பிறந்தநாள். அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம்
Image Source: x-com/actorkaranoffl
ஈரோடு மாவட்டத்தில் 1967 ஆகஸ்ட் 19ம் தேதி பிறந்தார் நடிகர் கரண். அவரது இயற்பெயர் ரகு கேசவன் ஆகும். 5 வயதிலே குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்
Image Source: x-com/actorkaranoffl
தமிழ் மற்றும் மலையாள படங்களில் மாஸ்டர் ரகு என்னும் பெயரில் குழந்தை நட்சத்திரமாக அழைக்கப்பட்டு வந்தார். 1972 முதல் 1980 வரை, சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தினார்.
Image Source: x-com/actorkaranoffl
1974 மற்றும் 1975 என தொடர்ந்து 2 வருடங்கள் கேரள மாநிலத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை கரண் பெற்றார்.
Image Source: x-com/actorkaranoffl
1992ல் ரஜினியின் அண்ணாமலை படத்தில் சிறிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு, 1994ல் கமலின் நம்மவர் படத்தில் லீட் ரோலில் நடித்திருப்பார். அப்படத்தில் தான் மாஸ்டர் ரகுவில் இருந்து கரணாக மாறினார்
Image Source: facebook-com/karanoffl
2004ல் Isra எனும் மலையாள படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திட, கொக்கி, கருப்பசாமி குத்தகைதாரர் போன்ற தமிழ் படங்களிலும் நடித்தார். 2009ல் Malayan படத்திற்காக கேரள மாநிலத்தின் சிறந்த நடிகர் விருதையும் வென்றார்
Image Source: instagram-com/karan_fans_club
பாலிவுட் நடிகை கரீனா கபூருடன் கரண் இணைந்து பணியாற்றியுள்ளார். 45 நொடிகள் ஓடும் அந்த பைக் விளம்பரத்திற்கு அச்சமயத்தில் நல்ல வரவேற்பும் கிடைத்தது
Image Source: instagram-com/kareenakapoorkhan
1996ல் வெளியான கோயம்புத்தூர் மாப்பிள்ளை இடம்பெற்ற கரணின் சிறிய வீடியோ ஒன்று, 2018ல் வைரலானது. அதனை பகிர்ந்து Shroov என்னும் வார்த்தையை 2k இணையவாசிகள் ட்ரெண்டாக்கினர்.
Image Source: x-com/actorkaranoffl
2016ல் Uchathula Shiva படத்துடன் நடிப்பில் இருந்து கரண் பிரேக் எடுத்துகொண்டார். ஆனால், நிச்சயம் Shroov கரண் கம்பேக் கொடுத்தால், அவருக்கேன தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. படத்திற்கு படம் தனது நடிப்பை மெருகூட்டிக்கொண்டே இருந்த கரணுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Image Source: facebook-com/karanoffl
Thanks For Reading!