[ad_1] இதயத்தில் ஒரு வித இரைச்சல் அல்லது சத்தம் கேட்குதா? அப்போ இதை படிங்க!

May 22, 2024

இதயத்தில் ஒரு வித இரைச்சல் அல்லது சத்தம் கேட்குதா? அப்போ இதை படிங்க!

mukesh M

இதயத்தில் இரைச்சல்?

மனிதன் உயிர் வாழ்வதற்கு இதயம் அவசியம். இதயத்தில் ஒருவித இரைச்சல் போன்ற சப்தத்தை நீங்கள் உணர்கிறீர்களா? இது ஏன் ஏற்படுகிறது? இதன் காரணங்கள் என்ன? இங்கு தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

Image Source: istock

அனைத்து சத்தமும் பிரச்சனை இல்லை!

இதயத்திலிருந்து வரக்கூடிய ஒரு சில ஒலிகள் அல்லது இரைச்சல்கள் பாதிப்பில்லாதவை. இதை கண்டு நீங்கள் அஞ்ச தேவை இல்லை. இது தற்காலிகமானது என்பதால் தானாகவே குணமடையும்.

Image Source: istock

அசாதாரணமான இரைச்சல்!

உங்களை மிகவும் தொந்தரவு செய்யும் வகையில் இதயத்தில் சப்தம் அல்லது இரைச்சல் இருந்தால் அது கவனிக்கப்பட வேண்டியவை. இது போன்ற சமயத்தில் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

Image Source: istock

இதய பிரச்சனை

பல நேரங்களில் இது போன்ற இரைச்சல்கள் அல்லது ஒலிகள் இதயம் சார்ந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். பரம்பரை பரம்பரையாக கூட இந்த பாதிப்பு தொடர்ந்து இருக்கலாம். இதய பாதிப்பின் காரணமாக கூட உங்களுக்கு இது போன்ற இரைச்சல்கள் கேட்கலாம்.

Image Source: istock

அறிகுறிகள் உண்டா?

மார்பு வலி, மயக்கம், மூச்சு திணறல் அல்லது பிற சுவாச பிரச்சனைகள் இதன் அறிகுறியாக இருக்கலாம். உடல் எடை அதிகரிப்பு, கழுத்துப் பகுதிகளில் வீக்கம், நரம்பில் வீக்கம், சருமம் நீல நிறமாக மாறுதல் போன்றவை இந்த பாதிப்பு இருப்பதற்கான மற்ற அறிகுறிகள்.

Image Source: pexels-com

குழந்தைகளை பாதிக்கிறது!

இதயத்தில் ஒலிகள் அல்லது இரைச்சல் போன்ற சத்தம் கேட்பது பிறந்த குழந்தைகளுக்கு கூட இருக்கலாம். சில நேரங்களில் பிறவி இதய குறைபாடுகள் மிகத் தாமதமாகவே கண்டறியப்படுகின்றன.

Image Source: istock

மருத்துவ பரிசோதனைகள்!

X-Ray, ECG, எக்கோ கார்டியோகிராபி போன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் சிகிச்சை அளிக்கப்படலாம். அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் தாமதம் இன்றி மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும்

Image Source: istock

தடுக்க வழி உண்டா?

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும். இதயத்தில் உண்டாகும் இரைச்சல்கள் அனைத்தும் ஆபத்தானவை இல்லை என்பதால் அதை குறித்து நீங்கள் கவலை கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

Image Source: istock

சிகிச்சை முறை

மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், தீவிர சிகிச்சை முறை இதற்கு தேவைப்படுகிறது. அறுவை சிகிச்சை மூலம் இந்த பாதிப்பினை சரி செய்ய முடியும்.

Image Source: istock

Thanks For Reading!

Next: குறட்டை-க்கும் - சர்க்கரை நோய்க்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?

[ad_2]