May 25, 2024
உடல் ஆரோக்கியம் காக்கும் அத்தியாவசிய ஊட்டமாக வைட்டமின் சி பார்க்கப்படும் நிலையில், இந்த வைட்டமின் சி இதய ஆரோக்கியம் காக்க எந்தெந்த வகையில் உதவுகிறது என இங்கு காணலாம்!
Image Source: istock
ஆய்வுகளின் படி வைட்டமின் சி நுகர்வு ஆனது மோனோசைட் ஒட்டுதலைக் குறைத்து, பெருந்தமனி தடிப்பு - அழற்சிகளை தடுக்கிறது. அந்த வகையில் இதய நோய் உண்டாவதன் வாய்ப்புகளை குறைக்கிறது.
Image Source: istock
வைட்டமின் சி-யின் நுகர்வு ஆனது இரத்த நாளங்களில் தேங்கும் கொலஸ்ட்ரால், கொழுப்புகளை கரைத்து சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது. அந்த வகையில் இதயத்திற்கு சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்து இதய ஆரோக்கியம் காக்கிறது.
Image Source: pexels-com
இதய ஆரோக்கியத்திற்கும், சுவாச மண்டல ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு காணப்படும் நிலையில், இந்த வைட்டமின் சி ஆனது சுவாச மண்டல ஆரோக்கியம் காத்து, இதய ஆரோக்கியத்தையும் காக்கிறது.
Image Source: istock
வைட்டமின் சி ஆனது அதன் கிருமி எதிர்ப்பு பண்புக்கு பெயர் பெற்றது. அந்த வகையில் இது கிருமி தொற்று உண்டாவதன் வாய்ப்பை குறைப்பதோடு, இதய ஆரோக்கியம் காப்பதிலும் மறைமுகமாக உதவுகிறது.
Image Source: istock
ஆய்வுகள் படி உடல் பருமன் ஆனது இதய ஆரோக்கியம் பாதிப்புக்கு பல வகையில் வழிவகுக்கிறது. இந்த வைட்டமின் சி-யின் நுகர்வு ஆனது கெட்ட (LDL) கொலஸ்ட்ராலை கரைத்து, உடல் பருமன் உண்டாவதன் வாய்ப்பையும் குறைக்கிறது.
Image Source: istock
ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள், கிவி, ப்ரோக்கோலி, பூக்கோசு, ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட பெர்ரி பழங்கள் வைட்டமின் சி-ன் சிறந்த ஆதாரமாக உள்ளன. குறித்த இந்த பழங்களை உண்கொண்டு உங்கள் இதய ஆரோக்கியத்தை காக்கலாம்!
Image Source: istock
நிபுணர்கள் கூற்றுப்படி பெண்களுக்கு சுமார் 75 மி.கி அளவும், ஆண்களுக்கு சுமார் 90 மி.கி அளவும் அவசியமாகிறது. எனவே, குறிப்பிட்ட இந்த அளவை பூர்த்தி செய்யும் அளவுக்கு வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்!
Image Source: istock
அளவுக்கு மிகுதியாக இந்த வைட்டமின் சி மூலங்களை எடுத்துக்கொள்வது தலைவலி, உடல் உஷ்ணம், வாந்தி - குமட்டல், சிறுநீரக கல் போன்ற பிரச்சனைகள் எழலாம். எனவே, வைட்டமின் சி-யினை அளவாக பயன்படுத்தி, ஆரோக்கிய வாழ்வை உறுதி செய்யுங்கள்!
Image Source: istock
Thanks For Reading!