Jul 1, 2024
இதய தமனியில் கெட்ட கொலஸ்ட்ரால் குவிவதால், தமனிகள் சுருங்கி இதயம் உட்பட அனைத்து உறுப்புகளுக்கான ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அவை நாளடைவில் உயிருக்கு ஆபத்து விளைவுவிக்கும் நிலைகளை உண்டாக்கலாம். இந்தப் பதிவில், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் சிவப்பு நிற ஜூஸ் வகை பற்றி காணலாம்
Image Source: istock
மாதுளை சாற்றில் வலுவான ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை இயற்கையாகவே உயர் ரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவக்கூடும்
Image Source: pexels-com
பீட்ரூட் சாற்றில் நைட்ரேட் உள்ளது. அது ரத்த நாளங்களை விரிவுப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவக்கூடும். இதனை தினமும் குடித்து வந்தால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்
Image Source: istock
கிரான்பெர்ரி ஜூஸில் உள்ள வலுவான ஆன்டிஆக்ஸிடன்டுகள், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் பண்புகளை கொண்டுள்ளது. தமனியில் பிளேக் உருவாக்கத்தை குறைத்து அடைப்பு ஏற்படுவதை தடுக்க செய்கிறது
Image Source: istock
தக்காளி ஜூஸில் lycopene எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி இதய நோய் அபாயத்தை அபாயத்தை குறைக்கிறது. தினமும் ஒரு கப் தக்காளி சாறு குடித்துவந்தால் தமனிகள் மிகவும் சுத்தமாக இருக்கக்கூடும்
Image Source: istock
செர்ரி ஜூஸில் anthocyanins உள்ளது. அவை அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகளை கொண்டுள்ளது. அவை ரத்த ஓட்டத்தை அதிகரித்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
Image Source: istock
இந்த ஜூஸில் resveratrol எனும் கலவை உள்ளது. அது இதயம் மற்றும் ரத்த நாளங்களை பாதுகாக்கக்கூடும். குறிப்பாக, தமனியில் பிளேக் உருவாக்கத்தை தடுத்து இதய செயல்பாட்டை மேம்படுத்தக்கூடும்
Image Source: istock
இந்த 6 சிவப்பு நிற ஜூஸ்களும் முற்றிலும் இயற்கையானது ஆகும். இதை குடிப்பதால் உடலில் எவ்வித பக்கவிளைவுகளும் உண்டாகாது
Image Source: istock
சிவப்பு நிற ஜூஸ்களின் முழு பலனை பெற, வெறும் வயிற்றில் குடியுங்கள். தினமும் ஒரு கப் குடிப்பது போதுமானது ஆகும். இதனை தினசரி உணவு முறையில் சேர்க்கும் முன்பு நிபுணரிடம் ஆலோசியுங்கள்
Image Source: istock
Thanks For Reading!