Jun 29, 2024
நார்ச்சத்து, ஆரோக்கிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்களின் சிறந்த ஆதாரமாக இருக்கும் அகாய் பெர்ரி - மாரடைப்பு, இதய செயலிழப்பு உள்ளிட்ட இதய நோய்களை தடுக்க உதவுமா? இல்லையா? என்பது குறித்து இங்கு காணலாம்.
Image Source: istock
ஆரோக்கிய கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த இந்த அகாய் பெர்ரி, தமனிகளின் உறுதித்தன்மையை உறுதி செய்கிறது. மேலும், இதயத்திற்கு சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்து - இதயம் தொடர்பான நோய்களை கட்டுப்படுத்துகிறது.
Image Source: istock
அகாய் பெர்ரியில் போதுமான அளவு அந்தோசயினின்கள் காணப்படுகின்றன. இவை, ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுவதோடு, புற்றுநோய் மற்றும் இதய நோய் உண்டாவதன் வாய்ப்புகளை குறைக்கிறது.
Image Source: istock
தனது ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு பெயர் பெற்ற இந்த அகாய் பெர்ரி பழங்கள், இதயம் உள்ளிட்ட உடல் உள் உறுப்புகளின் ஆரோக்கியம் காத்து, இதயம் சார்ந்த நோய்களின் வாய்ப்பை குறைக்கிறது.
Image Source: istock
ஆய்வுகளின் படி இந்த அகாய் பெர்ரியின் நுகர்வு ஆனது விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது. அந்த வகையில் உடல் பருமன் வாய்ப்புகளை தடுப்பதோடு, பருமனுடன் தொடர்புடைய மாரடைப்பு பிரச்சனைகளையும் இது தடுக்கிறது.
Image Source: pexels-com
இன்சுலின் உணர்திறனை மேலாண்மை செய்யும் பண்பு கொண்ட இந்த அகாய் பொர்ரி, நீரிழிவின் வாய்ப்பை குறைப்பதோடு, நீரிழிவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் இதய நோய்களையும் தடுக்கிறது.
Image Source: istock
இரத்த நாளங்களில் தேங்கும் கெட்ட LDL கொலஸ்ட்ராலை குறைக்கும் பண்பு கொண்டிருக்கும் அகாய் பெர்ரி ஆனது, இதயம் உள்ளிட்ட உள் உறுப்புகளுக்கு சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்து, மாரடைப்பு உண்டாவதன் வாய்ப்பை குறைக்கிறது.
Image Source: istock
தனி நபரின் உடல் நிலை மற்றும் எடை பொருத்து அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய பெர்ரி பழத்தின் அளவு மாறுபடுகிறது. இயல்பு நிலையில் உள்ள நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு கோப்பை போதுமானது.
Image Source: istock
அகாய் பெர்ரி பழத்தை அளவுக்கு மிகுதியாக உட்கொள்வது, வயிற்றுப்போக்கு, வாந்தி - குமட்டல் போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, மருத்துவர் குறிப்பிடும் அளவில் இந்த பெர்ரி பழத்தை எடுத்துக்கொள்வது நல்லது.
Image Source: istock
Thanks For Reading!