Aug 5, 2024
By: mukesh Mஇந்தியர்கள் மத்தியில் (குறிப்பாக இளைஞர்கள் மத்தியில்) நாளுக்கு நாள் கொரியன் மோகம் அதிகரித்து வருகிறது. இந்திய இளவட்டங்கள் விரும்பும் இந்த கொரிய கலாச்சாரம், மொழியை மிகவும் எளிமையாக கற்பது எப்படி? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: unsplash-com
ஒரு மொழியை கற்கும் முன் அதன் அடிப்படை (எழுத்துக்களை) கற்பது அவசியம். மொழியின் உச்சரிப்புக்கு மிக மிக அவசியமான இந்த எழுத்துக்களை எவ்வளவு விரைவாக கற்கிறோமோ, அவ்வளவு விரைவாக பேச துவங்கலாம்!
Image Source: unsplash-com
கொரியன் மொழியில் 24 எழுத்துக்கள் (Hangul) உள்ளது. இந்த கொரிய எழுத்துக்களை எப்படி உச்சரிப்பது? எந்த இடத்தில் எப்படி பயன்படுத்துவது? என்பதை இணைய உதவியுடன் முயற்சித்து பாருங்கள்!
Image Source: unsplash-com
தினசரி வாழ்வில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் கொரிய வார்த்தை என்ன? என்பதை தேடி தேடி படியுங்கள். அனுபவம் வழியே இந்த வார்த்தைகளை கற்பது, மொழியை விரைவாக கற்க உதவும்!
Image Source: unsplash-com
Konglish எனப்படுவது கொரியன் மற்றும் ஆங்கில வார்த்தைகளின் கலப்பில் உண்டாகும் வார்த்தைகள் ஆகும். இந்த Konglish வார்த்தைகளை கொரியன் வார்த்தைகளுக்கு இடையில் பயன்படுத்துவது, தடையற்ற உரையாடலுக்கு உதவும்!
Image Source: unsplash-com
கொரிய மொழி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களை பார்க்க துவங்குவது, உணர்வுகள் வழியே வார்த்தைகளை கற்க உதவியாக இருக்கும். இதன் மூலம் நீங்கள் புது வார்த்தைகளை அதிகம் கற்கலாம்!
Image Source: instagram-com
குறிப்பிட்ட ஒரு மொழியில் புலமை பெற, மொழியை படிப்பதோடு மட்டும் அல்லாது, பிறருடன் பேசி பயிற்சிப்பது அவசியம். எனவே, கொரிய மொழியை அறிந்த நண்பர்களுடன் கொரிய மொழியில் பேசி பயிற்சி எடுங்கள்!
Image Source: unsplash-com
நாள் ஒன்றுக்கு இத்தனை வார்த்தைகளை கற்க வேண்டும் என்பது போன்ற இலக்கை நிர்ணயித்து, தினசரி கடைப்பிடித்து வர இந்த கொரியன் மொழியை நீங்கள் விரைவாக கற்கலாம்!
Image Source: unsplash-com
கொரிய மொழியை கற்று தரும் பயிற்சி நிலையங்களில் இணைந்து உங்கள் மொழிப்புலமையை நீங்கள் வளர்துக்கொள்ளலாம். மேலும், கொரிய மொழியை இலக்கணத்தோடு கற்க இந்த வழி உதவியாக இருக்கும்.
Image Source: unsplash-com
Thanks For Reading!