May 13, 2024
பீட்ரூட் தோலில் வைட்டமின், மினரல்கள் உட்பட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எவ்வாறு பயன்படுகிறது என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
பீட்ரூட் தோல் கரையக்கூடிய நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும். அவை செரிமானத்தை சீராக்குவதோடு குடல் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை போக்க செய்கிறது
Image Source: istock
பீட்ரூட் தோலில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
Image Source: pexels-com
பீட்ரூட் தோலில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு சருமத்தை பளபளப்பாக மாற்றக்கூடும்
Image Source: istock
பீட்ரூட் தோலில் காணப்படும் நைட்ரேட், ரத்த அழுத்தத்தை சமநிலையில் பராமரித்து இதய ஆரோக்கியத்திற்கு உதவி புரிகிறது
Image Source: istock
இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை, ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்க செய்வதால், நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ள தீர்வாகும்
Image Source: istock
தோலில் உள்ள நார்ச்சத்து, வயிறு முழுமையான உணர்வை தரக்கூடும். இதனால் அதிகமாக சாப்பிடுவது தடைப்படுவதால், எடை மேலாண்மைக்கு பயனுள்ள தீர்வாகும்
Image Source: istock
பீட்ரூட்டில் உள்ள கலவைகள், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதுதவிர, அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலில் உண்டாகும் தேவையற்ற வீக்கத்தை நீக்கக்கூடும்
Image Source: istock
பீட்ரூட் தோலை பல வழிகளில் தினசரி உணவு முறையில் சேர்க்க செய்யலாம். சூப், ஸ்டூ, சாலட் போன்ற உணவுகளுடன் பீட்ரூட் தோலை சேர்ப்பது, உணவின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கக்கூடும்
Image Source: istock
Thanks For Reading!