Jun 4, 2024
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசாதமாக வழங்கப்படும் லட்டு, உலகப்புகழ்பெற்றது. ஒரு நாளைக்கு 3.5 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன.
Image Source: iStock
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி கோவிலில் தரப்படும் பஞ்சாமிர்தத்தின் சுவை இங்கு மட்டுமே கிடைக்கும். இதை பார்த்து தான் மற்ற கோவில்களில் பஞ்சாமிர்த பிரசாதம் வழங்கும் வழக்கம் ஏற்பட்டது.
Image Source: Samayam Tamil
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழங்கப்படும் அரவணை பாயசத்தின் சுவை தனித்துவமானது. அரிசி, வெல்லம், நெய் கலந்த இந்த பிரசாதத்தை அதிகமான பக்தர்கள் வாங்கி செல்வதுண்டு.
Image Source: Samayam Tamil
திவ்யதேச கோவில்களில் தோசை பிரசாதமாக கொடுக்கப்படும் கோவில் இது தான். இது ஒரு வாரம் வரை கெட்டுப் போகாது வகையில் தயார் செய்யப்படுகிறது.
Image Source: Samayam Tamil
ஒடிசா மாநிலம் புரி ஜெகந்நாதர் கோவிலில் தினமும் 56 வகையான உணவுகள் பிரசாதமாக படைக்கப்படுகிறது. இதற்காக தினமும் டன் கணக்கில் காய்கறிகள் பயன்படுத்தப்படுகிறது.
Image Source: Samayam Tamil
ஷீரடி சாய்பாபா கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு உணவு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 2000 கிலோ பருப்பு வைத்து சமைக்கிறார்கள். ஆசியாவின் மிகப் பெரிய சமையலறை இது தான்.
Image Source: Samayam Tamil
பருப்பு, சாதம், சப்பாத்தி என அமிர்தசரஸ் பொற்கோவிலில் பலவகையான உணவுகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. தன்னார்வலர்கள் பலர் இதில் ஈடுபடுகிறார்கள்.
Image Source: Samayam Tamil
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் இட்லி பிரசாதமாக படைக்கப்படுகிறது. மிளகு, சீரகம் உள்ளிட்டவை சேர்க்கப்பட்ட இந்த இட்லி தான் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
Image Source: Samayam Tamil
விருந்தாவன் கிருஷ்ணர் கோவிலில் சுத்தமான பசும் பாலில் இருந்து எடுக்கப்பட்ட வெண்ணெய் தான் சுவாமிக்கு படைக்கப்பட்டு, பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இங்க பால் போக் என்ற பெயரில் பலவகையான வட இந்திய உணவுகள் கிருஷ்ணருக்கு படைக்கப்படுகிறது.
Image Source: THE TIMES OF INDIA NEWS SERVICE
Thanks For Reading!