[ad_1] இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி எங்கு இருக்கு தெரியுமா?​

May 4, 2024

இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி எங்கு இருக்கு தெரியுமா?​

Anoj

உயரமான நீர்வீழ்ச்சி

கோடை காலத்தில் வெப்பத்தை தணிப்பதற்கான சிறந்த ஸ்பாட்டாக நீர்வீழ்ச்சிகள் திகழ்கிறது. உயரத்தில் இருந்து கொட்டும் தண்ணீரில் நீராடுவது சூப்பரான உணர்வை தரக்கூடும். இந்தப் பதிவில், இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி பட்டியலை விரிவாக பார்க்கலாம்

Image Source: pexels-com

Kunchikal Waterfalls

கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள குஞ்சிக்கல் அருவி, இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 455 மீட்டர் அதாவது 1,493 அடியுடன் இந்தியாவிலே உயரமான நீர்வீழ்ச்சியாக கம்பீரமாக காட்சியளிக்கிறது

Image Source: instagram-com/geologythamizha

Barehipani Falls

இது ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம் 399 மீட்டர் அதாவது 1,309 அடி ஆகும். இந்த நீர்வீழ்ச்சி அதன் அழகிய சுற்றுப்புறத்துடன், சுற்றுலா வாசிகளுக்கும் சிறந்த அனுபவத்தை தர செய்கிறது

Image Source: instagram-com/buddhadeb-raj

Nohkalikai Falls

இது மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 340 மீட்டர் அதாவது 1,120 அடி உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் நீரில் சுற்றுலா பயணிகள் நீராட செய்வார்கள். அதன் அழகிய சுற்றுப்புறம் காரணமாக கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக உள்ளது

Image Source: unsplash-com

Nohsngithiang Falls

இது மேகாலயாவில் இருக்கும் மற்றொரு அழகிய நீர்வீழ்ச்சி ஆகும். இதன் உயரம் 315 மீட்டர் அதாவது 1,003 அடி ஆகும். இந்த அருவி மலைகளின் பேக்கிரவுண்டில் பார்வையாளர்களை வசீகரிக்க செய்கிறது

Image Source: instagram-com/wander_meghalaya

Dudhsagar Falls

இது கோவாவின் பிரபலமான சுற்றுலா தளமாகும். இந்த நீர்வீழ்ச்சி தெற்கு கோவாவில் அமைந்துள்ளது. இதன் உயரம் சுமார் 310 மீட்டர் அதாவது 1,020 அடி ஆகும். குறிப்பாக, மலைக்காலத்தில் இந்த அருவியின் பால் வெள்ளை தோற்றம், சுற்றுலா வாசிகளை கவரக்கூடும்

Image Source: instagram-com/yathravazhi-in

Kynrem Falls

இது மேகாலயாவின் மற்றொரு ஹாட் ஸ்பாட் ஆகும். இந்த நீர்வீழ்ச்சி 305 மீட்டர் அதாவது 1,001 அடியில் இருந்து மூன்று அடுக்குகளில் இறங்குகிறது. பசுமை மற்றும் மூடுபனியால் சூழப்பட்டுள்ள இந்த நீர்வீழ்ச்சி, இயற்கை ஆர்வலர்களின் விருப்பமான இடமாகும்

Image Source: instagram-com/deepakrajput2309

Meenmutty Falls

மீன்முட்டி நீர்வீழ்ச்சி, கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 300 மீட்டர் அதாவது 984 அடி உயரத்தில் இருந்து விழும் ஒர் அடுக்கு நீர்வீழ்ச்சியாகும். இதன் மயக்கும் அழகு மற்றும் அமைதியான சுற்றுப்புறம் காரணமாக சுற்றுலா வாசிகளிடையே பிரபலமான இடமாக உள்ளது

Image Source: unsplash-com

Thalaiyar Falls

இந்த நீர்வீழ்ச்சி, தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்லகுண்டுவில் அமைந்துள்ளது. இது 297 மீட்டர் அதாவது 974 அடி உயரம் கொண்ட குதிரைவால் போல் காட்சியளிக்கும் நீர்வீழ்ச்சியாகும். பசுமையான மலைகளின் பின்னணியில் சுற்றுலா வாசிகளை மெய் சிலிர்க்க வைக்கிறது

Image Source: instagram-com/b-nagaprabhu

Thanks For Reading!

Next: வாழ்வில் ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய உலகின் ‘மிகப்பெரிய தீவுகள்’!

[ad_2]