Jul 11, 2024
By: Anojமுகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு பல கோடிகளை வாரி இறைக்கும் நிலையில், இதற்கு முன்பு இந்தியாவில் அதிக செலவில் நடந்த திருமணங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்
Image Source: instagram-com
முகேஷ் அம்பானி மகள் இஷாவுக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிராமல்-க்கும் 2018ல் திருமணம் நடைபெற்றது. ரூ.90 கோடி லெஹங்கா முதல் ரூ.3 லட்சம் மதிப்பிலான திருமண அழைப்பிதழ் வரை, ஆடம்பரமாக நடந்த திருமணத்தின் மொத்த செலவு ரூ.700 கோடி ஆகும்
Image Source: instagram-com
மறைந்த தொழிலதிபர் சுப்ரதா ராயின் 2 மகன்களுக்கு, 2004ம் ஆண்டு ஒரே நேரத்தில் நடந்த பிரமாண்ட திருமண நிகழ்வாகும். கிட்டத்தட்ட 11 ஆயிரம் விருந்தினர்கள் பங்கேற்ற இந்தியாவின் மிகவும் செலவுமிக்க திருமணமாக திகழ்கிறது
Image Source: instagram-com
சுரங்கத் தொழிலதிபரும், முன்னாள் அரசியல்வாதியுமான ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணி ரெட்டிக்கு, ராஜீவ் ரெட்டி என்பவருடன் 2016ல் திருமணம் நடைபெற்றது. 50 ஆயிரம் விருந்தினர்கள் பங்கேற்ற இந்த திருமண நிகழ்வின் மொத்த செலவு ரூ.500 கோடி ஆகும்
Image Source: instagram-com
எஃகுத் தொழிலதிபர் பிரமோத் மிட்டலின் மகள் ஸ்ரீஸ்டி-க்கும், முதலீட்டு ஆலோசகரான குல்ராஜ் பெஹல்-க்கும் 2013ல் திருமணம் நடைபெற்றது. ஸ்பெயினில் 3 நாட்கள் நடந்த திருமண கொண்டாட்டதத்தின் மொத்த செலவு ரூ.500 கோடி என சொல்லப்படுகிறது
Image Source: instagram-com
எஃகுத் தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டலின் மகள் வனிஷா, லண்டனில் பணிபுரியும் அமித் பாட்டியாவை 2004-ல் திருமணம் செய்தார். இந்த ஜோடியின் திருமணம் பாரிஸில் 6 நாட்கள் நடைபெற்றது. இதன் மொத்த செலவு ரூ.240 கோடி ஆகும்
Image Source: instagram-com
2015ல் தொழிலதிபர் சஞ்சய் ஹிந்துஜா தனது நீண்ட நாள் காதலியான அனு மஹ்தானியை திருமணம் செய்துகொண்டார். உதய்பூரில் மிக பிரமாண்டமாக நடந்த இந்த ஜோடியின் திருமண செலவு ரூ.140 கோடி ஆகும். இதில் பாப் நட்சத்திரங்களும் பங்கேற்றனர்
Image Source: instagram-com
2017ல் ஸ்டாலியன் குழும நிறுவனரான சுனில் வாஸ்வானியின் மகள் சோனம் வாஸ்வானிக்கும், நவீன் என்பவருக்கும் ஆஸ்திரியாவில் திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடியின் திருமண செலவு ரூ.210 கோடி ஆகும்
Image Source: instagram-com
கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும், இத்தாலியில் மிகவும் ஆடம்பரமான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண கொண்டாட்டத்தின் மொத்த செலவு கிட்டத்தட்ட ரூ.100 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது
Image Source: instagram-com
Thanks For Reading!