May 20, 2024
சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படும் பால் மற்றும் பால் பொருட்களுக்கு இந்தியாவில் தடை உள்ளது. குழந்தைகள் சாப்பிடும் பால் பொருட்கள் உள்ளிட்டவற்றில் கலப்படம், குறைவான தரம் இருப்பதால் 2008 ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளன.
Image Source: iStock
கேன்சரை உருவாக்கக் கூடிய தன்மை கொண்ட பொட்டாசியம் புரோமேட்டிற்கு 2016ம் ஆண்டு முதல் தடை உள்ளது. பிரெட், மாவு போன்றற்றில் அளவை அதிகரிக்கவும், மென்மை தன்மையை தக்க வைக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.
Image Source: नवभारतटाइम्स.कॉम
பழங்களை செயற்கையாக பழுக்க வைப்பதற்காக பயன்படுத்தப்படும் கால்சியம் கார்பைடு, எத்திலீன் வாயு உள்ளிட்ட கெமிக்கல்களுக்கு இந்தியாவில் தடை உள்ளது.
Image Source: iStock
புகழ்பெற்ற குளிர்பானமான ரெட் புல்லுக்கு 2006ம் ஆண்டு FSSAI தடை விதித்தது. அதிகப்படியான காஃபின் பொருள் சேர்க்கப்படுவதால் இதயத்துடிப்பை அதிகப்படுத்தி, ரத்த அழுத்தத்துடன், ரத்தத்தில் நீர் தன்மையை குறைத்து, அடிக்கடி தாக உணர்வை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகும்.
Image Source: iStock
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டிற்கு 2019 ம் ஆண்டு இந்தியா தடை விதித்தது. இந்த பூண்டுகளில் அதிகப்பட்டியான பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டதால் இந்த வகை பூண்டுகளுக்கு தடை உள்ளது.
Image Source: iStock
சிட்ரஸ் சுவை கொண்ட சோடாக்கள் போன்ற பானங்களில் புரோமினேட்டட் தாவர எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது நரம்பியல் பிரச்சனைகள், தைராய்டு குறைபாடுகளை ஏற்படுத்தக் கூடியதாகும்.
Image Source: iStock
முயல் இனங்கள் அழிந்து வருவதால், விலங்குகளின் நலன் கருதி இந்தியாவில் முயல் கறிகளுக்கு தடை உள்ளது. இதற்கு மத நம்பிக்கைகளும் ஒரு காரணமாகும்.
Image Source: iStock
டிரான்ஸ் கொழுப்பு தன்மை கொண்ட மிட்டாய்களுக்கு இந்தியாவில் தடை உள்ளது. இவைகள் கெட்ட கொழுப்புக்களின் அளவை உடலில் அதிகரிக்க வைக்கின்றன. இவைகள் இதய நோய்களை உண்டாக்குவதால் மிக இளம் வயதிலேயே இதய நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்படுகிறது.
Image Source: iStock
Thanks For Reading!
Find out More