[ad_1] இந்தியாவில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்படும் மலைவாச ஸ்தலங்கள்!

Jul 16, 2024

இந்தியாவில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்படும் மலைவாச ஸ்தலங்கள்!

mukesh M, Samayam Tamil

மலை வாழிடங்கள்!

இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட மலைத்தொடர்கள் இருப்பதால், நாட்டில் பார்க்க மலைப்பகுதிகளுக்கு பஞ்சமில்லை என்று தான் கூறவேண்டும். அந்த வரிசையில் இந்தியாவில் குறைந்தளவு சுற்றுலா பயணிகளை காணும் அழகிய மலைவாச ஸ்தலங்கள் ஒரு சிலவற்றை குறித்து இங்கு பார்க்கலாம்.

Image Source: pexels-com

ஜிரோ, அருணாசல பிரதேசம்!

ஜிரோ, இந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான நிலப்பரப்புகளில் ஒன்றாகும். யுனெஸ்கோவால் இந்த இடம் உலக பாரம்பரிய தளங்களில் சேர்க்கப் பட்டுள்ளது.

Image Source: unsplash-com

மஷோப்ரா, இமாச்சல பிரதேசம்!

மஷோப்ரா என்னும் மலைவாசஸ்தலம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு விசித்திரமான சிறிய நகரமாகும். இது ஹிந்துஸ்தான்-திபெத் சாலை வழியாக சிம்லாவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Image Source: unsplash-com

முன்சியாரி, உத்தரகாண்ட்!

முன்சியாரி, உத்தரகாண்டில் உள்ள சாகச ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இடம் இது. இங்கு 2298 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அழகிய மலைவாசஸ்தலம் உள்ளன.

Image Source: unsplash-com

அரக்கு பள்ளத்தாக்கு, ஆந்திரப் பிரதேசம்!

கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள இந்த அழகிய பள்ளத்தாக்கு ஆந்திரப் பிரதேசத்தின் மிகச் சிறந்த இடங்களில் ஒன்றாகும். மேலும், காப்பி தோட்டங்கள், அருவி, குகைகள் மற்றும் பல இயற்கை அம்சங்களுக்கு பெயர் பெற்ற ஒரு இடமாகவும் இது உள்ளது!

Image Source: unsplash-com

தரம்கோட், இமாச்சல பிரதேசம்!

இந்த வினோதமான சிறிய மலைவாசஸ்தலம் தரம் கோட், தர்மஷாலாவில் இருந்து தனியாக விலகி, மெக்லியோட்கஞ்ச் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. எனவே இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருக்கும்.

Image Source: unsplash-com

காசா, இமாச்சல பிரதேசம்!

இந்த உயரமான குளிர் பாலைவனம் காசா திபெத் அல்லது லடாக் போன்ற நிலப்பரப்புடன் கடல் மட்டத்திலிருந்து 3650 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு மக்கள் தொகை குறைவாக இருக்கும்.

Image Source: unsplash-com

அரு பள்ளத்தாக்கு, காஷ்மீர்

காஷ்மீர் பஹல்காமின் கிராமம் போன்ற சூழலை நீங்கள் ரசித்திருந்தால், லிடர் நதியின் சப்தங்கள் மற்றும் அரு பள்ளத்தாக்கின் அழகை ரசிக்கலாம். இங்கு மக்கள் தொகை குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Image Source: unsplash-com

கிப்பர், இமாச்சல பிரதேசம்!

கிப்பர், இமாச்சல பிரதேசம் மலை வாழ்பகுதி சுமார் 4205 மீ உயரத்தில் உலகின் மிக உயரமான கிராமமாக கருதப்படுகிறது. இது கடினமான நிலப்பரப்பைக் கொண்டுள்ளதால்,சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருக்கும்.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: மழைக்காலத்தில் இந்தியாவில் செல்லக்கூடாத இடங்கள் என்ன தெரியுமா?

[ad_2]