[ad_1] இந்தியாவில் 'Camping' போக சிறந்த இடங்கள் எது தெரியுமா?

May 20, 2024

இந்தியாவில் 'Camping' போக சிறந்த இடங்கள் எது தெரியுமா?

Anoj

கேம்பிங் செல்வது

நண்பர்கள் அல்லது துணையுடன் சேர்ந்து கேம்பிங் செல்வது அனைவரது விருப்பமாகும். இயற்கை அழகை ரசித்தப்படி கதை பேசி மகிழலாம். சிலர் தனியாகவும் தங்கிட செய்வார்கள். இந்தியாவில் Camping-க்கு சிறந்த ஸ்பாட் எது என்பதை இங்கு பார்க்கலாம்

Image Source: pexels-com

ரிஷிகேஷ், உத்தரகாண்ட்

ரிஷிகேஷ், கேம்பிங் ஆர்வலர்களின் ஃபேவரைட் இடமாகும். கங்கை நதிக்கரையோரம் கூடாரம் அமைத்து தங்குவது மனநிறைவை தரக்கூடும். அங்கு தங்குகையில், வாட்டர் ராஃப்டிங் மற்றும் யோகா அமர்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கக்கூடும்

Image Source: unsplash-com

மணாலி

குலு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மணாலி, கேம்பிங் மற்றும் மலையேற்ற ஆர்வலர்களின் சொர்க்க பூமியாகும். இனிமையான காலநிலையில் பனி மூடிய மலைகளின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை பார்த்தப்படி தங்க செய்யலாம்

Image Source: unsplash-com

ஹார்ஸ்லி ஹில்ஸ்

'ஆந்திராவின் ஊட்டி" என அழைக்கப்படும் ஹார்ஸ்லி ஹில்ஸ், கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத்தலமாகும். குளிர்ந்த காலநிலை மற்றும் வசீகரிக்கும் இயற்கை அழகு காரணமாக முகாமிடுவதற்கு ஏற்ற இடமாக திகழ்கிறது

Image Source: instagram-com/iampoojasingh_

குத்ரேமுக் தேசிய பூங்கா

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குத்ரேமுக் தேசிய பூங்கா இயற்கை ஆர்வலர்களின் சொர்க்க பூமியாகும். இது பிரபலமான ட்ரெக்கிங் பாதைகளில் ஒன்றாகும். செழிப்பான மழைக்காடுகளுக்கு மத்தியில் முகாமிடுகையில் அரிய வகை விலங்குகளை காணலாம்

Image Source: unsplash-com

மவுண்ட் அபு

ராஜஸ்தானின் வெப்ப காலநிலையில் இருந்து தப்பிக்க விரும்பும் நபர்கள், மவுண்ட் அபுவுக்கு ட்ரிப் திட்டமிடுவார்கள். ஆரவல்லி மலைகளுக்கு மத்தியில் முகாமிடுவது புதுமையான அனுபவத்தை தரக்கூடும்.

Image Source: unsplash-com

நைனித்தால்

குளிர்ந்த காலநிலை கொண்டுள்ள நைனித்தால், கோடையில் கேம்பிங் ஆர்வலர்களின் பிரபலமான தேர்வாகும். நைனிடால் ஏரி நகரின் மையமாக திகழ்கிறது. அங்கு முகாமிடுகையில் ஏரியில் படகு சவாரி செய்து மகிழலாம் அல்லது கேபிள் கார் ரைடில் ஈடுபட செய்யலாம்

Image Source: unsplash-com

மூணார்

தென்னந்தியாவில் கேம்பிங் ஆர்வலர்களின் விருப்பமான இடமாகும். பசுமையான மலைகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் அருவிகள் ஆகியவை முகாமிட்டு தங்கிட மூணாரை சிறப்பான இடமாக மாற்றுகிறது

Image Source: unsplash-com

கூர்க்

இது தென்னிந்தியாவின் மற்றொரு கேம்பிங் ஸ்பாட்டாகும். இந்தியாவின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படும் கூர்க், காபி தோட்டங்கள் மற்றும் அருவிகளுக்கு பெயர்பெற்றது. இங்கு முகாமிடுவதால் இயற்கை அழகை ஆராய்வதோடு வனவிலங்குகள் காணும் வாய்ப்பும் கிடைக்கக்கூடும்

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: கோடை வெயிலை சமாளிக்க உலகின் சிறந்த கடற்கரைகள் - இங்கு செல்ல Visa அவசியம் இல்லை!

[ad_2]