Jun 18, 2024
இந்திய கிரிக்கெட் அணியில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தலைமுறைகளாக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்கள் ஒரு சிலர் பற்றி இங்கு நாம் காணலாம்!
Image Source: twitter-com
1960 -70 காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்தவர் மன்சூர் அலி கான் பட்டோடி. இவரது தந்தை இப்திகார் அலி கான் பட்டோடி; இங்கிலாந்து மற்றும் இந்தியா என இரண்டு அணிகளுக்காகவும் விளையாடிய வீரர் ஆவார்.
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணிக்காக நான்கு கிரிக்கெட் வீரர்களை அளித்த குடும்பம். தந்தை லாலா அமர்நாத் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித் முதல் இந்தியர் என பெயர் பெற்றவர். இவரது மகன் மோகிந்தர் அமர்நாத் 1983 உலக கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தவர்.
Image Source: twitter-com
1986 - 96 இடைப்பட்ட காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ODI அணியில் இடம் பிடித்தவர். இவரது தந்தை விஜய் மஞ்ச்ரேக்கர் 1950 - 70’களில் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார்.
Image Source: twitter-com
தந்தை சுனில் கவாஸ்கர் மற்றும் மகன் ரோகன் கவாஸ்கர் என இரண்டு பேர் இதுவரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளனர். 1983-ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற அணியில் அங்கம் வகித்த சுனில் கவாஸ்கரின் மகன் ரோகன் இந்தியாவிற்காக 11 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்!
Image Source: twitter-com
2007-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணி மற்றும் 2011-ஆம் ஆண்டு ODI உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் முக்கிய இடம் வகித்தவர் யுவராஜ் சிங். இவரது தந்தை யோகராஜ் சிங், இந்தியாவிற்காக ஒரு டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளர்.
Image Source: instagram-com
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரோஜர் பின்னியின் மகன். 2014 -19 இடைப்பட்ட காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய ஸ்டுவாட் மொத்தம் 6 டெஸ்ட், 14 ODI மற்றும் 3 டி20 விளையாடியுள்ளார்.
Image Source: twitter-com
1997–2000 இடைப்பட்ட காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 34 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர். இவரது தந்தை ஹேம்நாத் கனிட்கர், இந்திய கிரிக்கெட் அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
Image Source: twitter-com
70-களில் இந்திய கிரிக்கெட் அணிக்காக 22 டெஸ்ட் மற்றும் ஒரு ODI விளையாடிய இவர், 1946 - 59 இடைப்பட்ட காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் அங்கம் வகித்த வினோ மன்கட்-ன் மகன் ஆவார்!
Image Source: twitter-com
Thanks For Reading!