Jun 22, 2024
கிரிக்கெட் உலகில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் படைத்த சாதனைகள் என்ன? குறித்த இந்த சாதனைகளின் முக்கியத்துவம் என்ன? என்பது குறித்தும் இங்கு காணலாம்!
Image Source: twitter-com
டெஸ்ட், ஒருநாள், டி20 என சர்வதேச போட்டிகளில் அதிக ரன் குவித்தோர் பட்டியலில், 34357 ரன்களுடன் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். 24 ஆண்டுகளாக இச்சாதனை யாராலும் முறியடிக்க படாமல் உள்ளது!
Image Source: twitter-com
சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள் குவித்தோர் பட்டியலில் இந்தியாவின் ரோகித் ஷர்மா 264 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாதனை முறியடிக்கப் படாமல் உள்ளது.
Image Source: twitter-com
டெஸ்ட், ஒருநாள், டி20 என சர்வதேச போட்டிகளில் அதிக சதம் அடித்தோர் பட்டியலில் 100 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி 80 சதங்களுடன் 2-ஆம் இடத்தில் உள்ளார்!
Image Source: twitter-com
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக Stumping செய்த விக்கெட் கீப்பர் பட்டியலில் 123 Stumping உடன் MS தோனி முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இலங்கையின் சங்ககார 99 Stumping செய்துள்ளார்!
Image Source: twitter-com
டெஸ்ட், ஒருநாள், டி20 என அதிக முறை சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (664) உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இலங்கையின் ஜெயவர்தனே (652) இரண்டாம் இடத்தில் உள்ளார்!
Image Source: twitter-com
சர்வதேச போட்டிகளில் அதிக முறை கேப்டனாக பங்கேற்ற வீரர்கள் பட்டியலில் MS தோனி (332) உள்ளார். இப்பட்டியலில் இவருக்கு அடித்தப்படியாக ரிக்கி பாண்டிங், ஸ்டீபென் பிளமிங், ஸ்மித் என ஓய்வு பெற்ற வீரர்களே இடம்பெற்றுள்ளனர்.
Image Source: twitter-com
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமான 300 விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் இந்தியாவின் ரவிச்சந்திர அஸ்வின் முதல் இடத்தில் உள்ளார். 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாதனை முறியடிக்கப் படாமல் உள்ளது!
Image Source: twitter-com
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிகம் LBW விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அனில் கும்ளே (156) முதல் இடத்தில் உள்ளார். இந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு அஸ்வீனுக்கு மட்டுமே தற்போது உள்ளது!
Image Source: twitter-com
Thanks For Reading!