Jun 22, 2024
உலக கோப்பை, தங்கப் பதக்கம் என இந்தியாவுக்கு உலக அரங்கில் பெயர் வாங்கித்தந்த விளையாட்டு பிரபலங்களில் சிலர், கெளரவ ராணுவ உயர் அதிகாரி பதவியை வகிக்கின்றனர். அந்த பிரபலங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்
Image Source: instagram-com/neeraj____chopra
மகேந்திர சிங் தோனி, ராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவியை வகித்து வருகிறார். 2011ம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் தோனி பணியாற்றுகிறார். 3 ஐசிசி கோப்பையை வென்ற ஒரே கேப்டன் எனும் பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.
Image Source: x-com
கோல்டன் பாய் என அழைக்கப்படும் நீரஜ் சோப்ரா, ராஜ்புதானா ரைபிள்ஸ் ரெஜிமென்ட்டில் இளநிலை ஆணையர் அந்தஸ்து கொண்ட பதவியை வகிக்கிறார். 2016ல் ராணுவத்தில் இணைந்த நீரஜ் சோப்ராவுக்கு, இளம் வயதிலே உயர் பதவி கிடைத்தது.
Image Source: instagram-com
கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், இந்திய விமான படையில் குரூப் கேப்டன் பதவி வகிக்கிறார். இவருக்கு 2010ம் ஆண்டு இந்த பதவி வழங்கப்பட்டது
Image Source: x-com
1983 உலக கோப்பையை இந்தியாவுக்கு வென்றுகொடுத்த கபில் தேவ், இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினண்ட் கர்னல் பதவியை கொண்டிருந்தார். இந்த பதவி 2008ம் ஆண்டு வழங்கப்பட்டது
Image Source: instagram-com/therealkapildev
ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்த விளையாட்டு வீரர் மில்கா சிங்கிற்கு, 1953ஆம் ஆண்டு இந்திய ஆயுதப் படையில் இளநிலை ஆணையர் பதவி வழங்கப்பட்டது.
Image Source: x-com
மல்யுத்த வீரர் தீபக் புனியா, இந்திய ராணுவத்தில் JCO எனும் கெளரவு இளநிலை ஆணையர் பதவியை வகிக்கிறார். 2022 காமென்வெல்த் கேம்ஸில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை வென்றுகொடுத்தார்
Image Source: instagram-com/deepakpunia86
2008ல் பீஜிங் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை வென்றுகொடுத்தவர். இவருக்கு இந்திய ராணுவம் கெளரவு லெப்டினென்ட் கர்னல் பதவியை வழங்கியது. இதுதவிர, அர்ஜூனா மற்றும் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதும் வாங்கியுள்ளார்
Image Source: nstagram-com/abhinav_bindra
இவர் ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில், துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்தவர். 1990ல் இந்திய ராணுவத்தில் இணைந்த ரத்தோர், லெப்டினன்ட், மேஜர், கர்னல் என தொடர்ச்சியாக பதவி உயர்வை பெற்றுகொண்டிருந்தார்
Image Source: x-com
Thanks For Reading!