[ad_1] இந்திய ஹாக்கி அணியின் சுவர்.. கோல்கீப்பர் 'ஸ்ரீஜேஷ்' பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

இந்திய ஹாக்கி அணியின் சுவர்.. கோல்கீப்பர் 'ஸ்ரீஜேஷ்' பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

Anoj, Samayam Tamil

Aug 9, 2024

ஹாக்கி அணியை சுமந்த ஸ்ரீஜேஷ்

ஹாக்கி அணியை சுமந்த ஸ்ரீஜேஷ்

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் பதக்கம் வென்றதில், கோல்கீப்பர் பி ஆர் ஸ்ரீஜேஷ் முக்கிய பங்கு வகித்தார். அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்

Image Source: instagram-com/sreejesh88

கேரள சிங்கம்

பி ஆர் ஸ்ரீஜேஷ், கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர். பள்ளிப்பருவத்திலே விளையாட்டின் மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. வாலி பால், நீளம் தாண்டுதலில் கவனம் செலுத்திய ஸ்ரீதேஷ், பயிற்சியாளரின் அறிவரை பேரில் ஹாக்கி விளையாட தொடங்கியுள்ளார்

Image Source: instagram-com/sreejesh88

18 வயதில் இந்திய அணியில் ஸ்ரீஜேஷ்

பள்ளி மற்றும் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய ஸ்ரீஜேஷ், 18 வயதிலே இந்திய ஹாக்கி அணியில் தனது இடத்தை உறுதி செய்தார்

Image Source: instagram-com/sreejesh88

2008ல் தங்க பதக்கம்

2008 ஜூனியர் ஆசிய கோப்பையில் இந்திய ஹாக்கி அணி, தங்க பதக்கம் வென்றப்போது தான் ஸ்ரீஜேஷ் பலரும் பாராட்டும் நபராக உருவெடுத்தார். அந்த தொடரின் சிறந்த கோல் கீப்பருக்கான விருதையும் வென்றார்

Image Source: instagram-com/sreejesh88

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி

2011ல் சீனாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஃபைனலில் இரண்டு பெனால்டி ஸ்ட்ரோக்குகளை தடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். அவரது திறனை கண்டு வியந்த ரசிகர்கள், இந்திய ஹாக்கி அணியின் சுவர் என அழைக்க தொடங்கினர்

Image Source: instagram-com/sreejesh88

சாதனைகள்

2016ல் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் பொறுப்பை ஸ்ரீஜேஷ் ஏற்றுக்கொண்டார். அந்த ஆண்டில் லண்டனில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் வெள்ளி பதக்கம் வென்றார். 2022 காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளி பதக்கம், 2022 ஆசிய விளையாட்டில் தங்க பதக்கம் என பல முக்கியமான போட்டிகளில் ஸ்ரீஜேஷ் தனது திறமையை நிரூபித்துள்ளார்

Image Source: instagram-com/sreejesh88

விருதுகள்

விளையாட்டில் ஸ்ரீஜேஷ் பங்களிப்பை பாராட்டி, 2017ல் பத்மஸ்ரீ விருதும், 2021ல் கேல் ரத்னா விருதும் வழங்கப்பட்டது. இதுதவிர, 2021ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விளையாட்டு வீரர் எனும் விருதை வென்று உலக அரங்கில் இந்தியாவை பெருமைப்பட வைத்தார்

Image Source: instagram-com/sreejesh88

தனிப்பட்ட வாழ்க்கை

ஸ்ரீஜேஷ், தனது நீண்ட நாள் காதலி அனீஷ்யாவை திருமணம் செய்துகொண்டார். அவர் முன்னாள் நீளம் தாண்டுதல் வீரரும் ஆயுர்வேத மருத்துவரும் ஆவார். இந்த ஜோடிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்

Image Source: instagram-com/sreejesh88

ஒலிம்பிக் நாயகன்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜெர்மனிக்கு எதிரான வெண்கல போட்டியில், கடைசி நிமிடத்தில் ஸ்ரீஜேஷ் தடுத்த கோல்லால், இந்திய அணி 1980க்கு பிறகு ஹாக்கியில் பதக்கத்தை பெற்றது. இப்போது, பாரிஸ் ஒலிம்பிக்கில் 2வது முறையாக பதக்கம் வென்ற ஸ்ரீஜேஷ் ஹாக்கியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்

Image Source: instagram-com/sreejesh88

Thanks For Reading!

Next: ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தொலைவிற்கு ‘ஈட்டி எறிந்தவர்’ யார்?

[ad_2]