Jun 15, 2024
By: Nivethaஉலகம் முழுவதும் சிறுநீரக புற்றுநோய் பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறுநீரக செல்களில் மாற்றம் ஏற்படுவதோடு, அவை கட்டுப்பாடின்றி வளர்ச்சியடையும் பட்சத்தில் இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.
Image Source: istock
இந்த வகை புற்றுநோய் பாதிப்பு இருந்தால் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரில் ரத்தம் போன்ற அறிகுறிகள் தென்படுமாம். ஆரம்பக்கட்டத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சையளித்தால் குணமடைந்து விடலாம்.
Image Source: pexels
ஜங்க் புட்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம், பாஸ்பரஸ் உள்ளிட்டவை அதிகம் இருப்பதால் இது சிறுநீரக செயல்பாடுகளில் பாதிப்பினை ஏற்படுத்தி புற்றுநோய் வரவழைக்க வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
Image Source: pexels
மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் எடுக்கப்படும் வலி நிவாரணிகள் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்துவதோடு, சிறுநீரகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி புற்றுநோய் பாதிப்பினை உண்டாக்குமாம்.
Image Source: pexels
உணவுகளில் அதிகளவு உப்பு சேர்த்து சாப்பிட்டால் உடலிலுள்ள சோடியத்தின் சமநிலை பாதிப்படைந்து சிறுநீரகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி நாளடைவில் சிறுநீரக நோய் பாதிப்பு அல்லது சிறுநீரக புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும்.
Image Source: pexels
அதிக தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீரகத்தில் உள்ள சோடியம் மற்றும் நச்சுக்கள் சிறுநீர் வழியே வெளியேறும். அதுவே தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிடில் நச்சுக்கள் சிறுநீரகத்திலேயே தேங்கி கட்டிகளாக மாறி பாதிப்பினை ஏற்படுத்தும்.
Image Source: pexels
அதிகளவு மது அருந்துபவர்களுக்கு சிறுநீரக புற்றுநோய் அபாயம் அதிகம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனால் மது பழக்கத்தினை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
Image Source: pexels
பக்கவாட்டு இடுப்பு வலி, உடல் சோர்வு, பலவீனம், எடை இழப்பு, மிதமான காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, எலும்பு வலி, ரத்தத்தில் அதிகளவு கால்சியம், பசியின்மை போன்ற தொடர் தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் அவசியம்.
Image Source: Samayam Malayalam
தவறான வாழ்க்கை முறை பழக்கங்களை தவிர்த்து அதிக குடிநீர் மற்றும் சிறுநீரகத்திற்கு ஆரோக்கியமளிக்கும் மற்றும் நீரேற்றமாக வைத்துக்கொள்ளும் உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் சிறுநீரக பாதிப்புகள் மற்றும் சிறுநீரக புற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Image Source: pexels
Thanks For Reading!