[ad_1] ​இந்த பொருட்களுடன் பேரிச்சம்பழத்தை சாப்பிட்டால் என்ன நன்மைகள் ?

Jun 24, 2024

​இந்த பொருட்களுடன் பேரிச்சம்பழத்தை சாப்பிட்டால் என்ன நன்மைகள் ?

Nivetha

​பேரிச்சம்பழம்

பேரிச்சம்பழம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாகும். இதனை சாப்பிட்டால் ஆரோக்கியம் மேம்படுவதோடு, பல நோய் பாதிப்புகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கின்றது.

Image Source: istock

​தினமும் சாப்பிடவும்

இதனை தவறாமல் தினமும் சாப்பிட்டால் பல்வேறு நன்மைகளை பெறலாம். இதனை ஊறவைத்து சாப்பிடுவதோடு பால், தேன், முந்திரி, பாதாம் பருப்பு ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

Image Source: pexels

​தேன்

பேரிச்சம்பழத்தினை தேனுடன் ஊறவைத்து தினமும் சாப்பிட்டால் கண் பார்வை கோளாறுகள் சரியாகி பார்வை தெளிவாகுமாம். அதே போல் மாலை கண் நோய் உள்ளோருக்கு இது ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது.

Image Source: istock

பால்

பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் உடலிலுள்ள எலும்புகள் பலவீனமாகி மூட்டு வலி போன்றவை ஏற்படும். அவர்கள் பேரீச்சம்பழத்தை பாலில் சேர்த்து கொதிக்க வைத்து பாலையும் அப்பழத்தையும் சேர்த்து உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Image Source: pexels

​பாதாம் பருப்பு

பாதாம் பருப்புடன் இப்பழத்தினை பாலில் கலந்து கொதிக்க வைத்து குடித்தால் நரம்பு மண்டலம் பலமடையும். அதிக வெப்பமுள்ள சூழலில் பணிபுரிபவர்கள் இதனை கட்டாயம் குடிக்க வேண்டும்.

Image Source: pixabay

​முந்திரி பருப்பு

சிறிது முந்திரி பருப்போடு பேரிச்சம்பழத்தினை சேர்த்து நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு அதனை குடித்தால் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

Image Source: pixabay

​மென்மையான சருமம்

தினமும் படுக்கைக்கு செல்லும் முன்னர் 2 பேரிச்சம்பழத்தினை 1 டம்ளர் பசும்பாலுடன் சேர்த்து குடித்தால் சருமம் மென்மையடைவதோடு, பல் சம்மந்தமான வியாதிகளும் குணமாகும்

Image Source: istock

​சர்க்கரை

சர்க்கரையை கைவிட விரும்புவோர் அதற்கு மாற்றாக இயற்கையான இனிப்பு சுவையினை கொண்டுள்ள பேரிச்சம்பழத்தினை பயன்படுத்தலாம்.

Image Source: istock

​குழந்தைகள்

இக்காலக்கட்டத்தில் வளரும் குழந்தைகளுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. இத்தகைய நிலையில், அவர்களுக்கு இதர ஸ்நேக்ஸ் வகைகள் கொடுப்பதோடு பேரிச்சம்பழத்தை தினமும் சாப்பிட கொடுப்பது மிகவும் நல்லது.

Image Source: istock

Thanks For Reading!

Next: ஆண்களின் ‘பானை வடிவ தொப்பைக்கு’ காரணம் என்ன?

[ad_2]