Apr 29, 2024
மாறிவரும் தொழில்நுட்பம் மற்றும் புதுவிதமான கண்டுபிடிப்புகள் பலவிதமான தொழில்களை முடக்கி வருகிறது. அப்படியாக சந்தையிலிருந்து வெளியேற்றப்பட்ட (அ) முடக்கப்பட்ட சில பணிகள் பற்றி இங்கு காணலாம்!
Image Source: pexels-com
ரயில், பேருந்துகளின் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து தர பல மையங்கள் செயல்பட்டு இருப்பதை பார்த்திருக்கலாம். தற்போது ஆன்லைனில் அனைத்து வசதிகளும் வந்து விட்டதால் இனி பயண முகவர்களுக்கு வேலை இல்லை.
Image Source: pexels-com
தியேட்டர்கள் டிஜிட்டலுக்கு மாறிவரும் நிலையில் அங்கு ப்ரொஜெக்டர் ஆபரேட்டராக இருந்தவர்கள் சகாப்தம் முடிந்து விட்டது.
Image Source: pexels-com
டிஜிட்டல் தகவல் தொடர்பு, சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி ஆகியவை அஞ்சலகங்களின் தேவையை முழுவதுமாக குறைத்துள்ளது. கடிதம் எழுதிய வரலாறு எல்லாம் கடந்த தலைமுறையோடு முடிந்து விட்டது.
Image Source: pexels-com
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வங்கிகளில் ஆன்லைன் வழியாக பண பரிவர்த்தனைகள் போன்றவற்றை மேற்கொள்வதாலும், ATM-களை பயன்படுத்துவதாலும் காசாளர்களின் தேவை குறைந்துள்ளது.
Image Source: pexels-com
பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் எண்ணிக்கை ரோபோக்கள் மற்றும் தானியங்கி மெஷின் போன்றவற்றால் நாளுக்கு நாள் குறைந்துக்கொண்டே வருகிறது!.
Image Source: pexels-com
செல்போன்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் லேண்ட்லைன் போன்கள் உபயோகம் குறைந்துவிட்டது. இதனால் அந்த துறையில் பணிபுரியும் தொலைபேசி ஆபரேட்டர்கள் பணிகளும் காலாவதியாகிவிட்டது.
Image Source: pexels-com
நூலகங்கள் முற்றிலுமாக அழிந்து விடாவிட்டாலும், அனைத்தும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கிடைப்பதால் நூலகத்தை நாடுவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் மூலவர் பணியும் தேவையில்லாத ஒன்றாக மாறி வருகிறது.
Image Source: pexels-com
அனைத்தும் கணினி மயமாகவிட்ட நிலையில் தட்டச்சு இயந்திரத்திற்கும், தட்டச்சு செய்யும் நபருக்குமான தேவை தற்போது இல்லாமல் போய்விட்டது!
Image Source: pexels-com
Thanks For Reading!