May 6, 2024
இனிப்பு வகைகளை சாப்பிட யாருக்கு தான் பிடிக்காது. காலை மதியம் இரவு என்று மூன்று வேளை உணவிற்கு பிறகும் இனிப்பு வகைகளை சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. இந்நிலையில், இனிப்பை சாப்பிட சிறந்த நேரம் எது? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
காலை உணவை தவிர்க்கக் கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். காலை உணவிற்கு பிறகு ஸ்வீட் சாப்பிட்டால் நாள் முழுவதும் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.
Image Source: istock
சிலருக்கு காலை உணவிற்கு பிறகு ஏதேனும் ஒரு ஸ்வீட் சாப்பிடும் பழக்கம் இருக்கும். இது நம் உடலில் டோபமைன் என்ற ஹார்மோனை அதிகரித்து உடல் எடை அதிகரிக்க செய்கிறது.
Image Source: pexels-com
மதிய நேரங்களில் உணவு சாப்பிட்ட பிறகு உங்களுக்கு பிடித்த இனிப்பு வகைகளை சாப்பிடலாம். ஏனென்றால் மதிய நேரத்தில் நம் உணவில் இருக்கும் கலோரிகளை எரிப்பது உடலுக்கு எளிதாக இருக்கும்.
Image Source: istock
மதிய உணவிற்கு பிறகு இனிப்பு வகைகளை சாப்பிட்டு குறைந்தது பத்து நிமிடமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இதற்கு பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் உணவு செரிமானத்திற்கு உதவும்.
Image Source: istock
டார்க் சாக்லேட் மற்றும் ஒரு கப் டீ சேர்த்து சாப்பிடுவது ஹெல்த்தி ஸ்வீட் என்று கூறப்படுகிறது. இந்த டார்க் சாக்லேட் சாப்பிட்ட பிறகு டீ குடிப்பதால் உங்களுக்கு அதிக அளவு இனிப்பு சாப்பிட்டது போல ஒரு திருப்தி கிடைக்கும்.
Image Source: istock
ஆண்கள் ஒன்பது டேபிள் ஸ்பூன் அல்லது 36 கிராம் சர்க்கரையை சாப்பிடலாம். அதே நேரம் பெண்கள் 6 டேபிள்ஸ்பூன் அல்லது 25 கிராம் சர்க்கரையை உணவில் சேர்த்து சாப்பிடலாம்.
Image Source: istock
டைப் 2 நீரிழிவு நோயாளிகள், உடல் பருமன் பிரச்சனை உள்ள நபர்கள், இதய நோயாளிகள் இனிப்பு வகைகளை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் உடல் சோர்வு, வீக்கம், குறைந்த ஆற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
Image Source: istock
நம் உணவில் இருந்து சர்க்கரையை முற்றிலுமாக அகற்றுவது சாத்தியம் இல்லை. இதனால் ஒரு நாளைக்கு நீங்கள் எவ்வளவு சர்க்கரை சாப்பிடுகிறீர்கள் என்பதை கண்காணிப்பது அவசியம்.
Image Source: istock
Thanks For Reading!