Jun 10, 2024
வீட்டில் உள்ள பயன்பாட்டு பொருட்களை பயன்படுத்தி சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை நீக்கி பொலிவான, பளபளப்பான சருமம் பெறுவது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
ஃபேஷியலின் முதல் படியாக கிளின்சர் பயன்படுத்தி சருமத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இந்த கிளின்சர் தயார் செய்ய நமக்கு 3 ஸ்பூன் பால் மற்றும் ஒரு ஸ்பூன் காப்பி பொடி தேவைப்படும்!
Image Source: istock
ஒரு கோப்பை ஒன்றில் பாலுடன் காபி பொடி சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும். பின் இந்த சருமத்தில் தேய்த்து - சருமத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
Image Source: istock
இந்த ஸ்க்ரப் தயார் செய்ய நமக்கு காப்பி பொடி 1 ஸ்பூன், அரிசி மாவு 1 ஸ்பூன், தேன் - 1 ஸ்பூன் மற்றும பால் - அரை ஸ்பூன் தேவைப்படும். இந்த ஸ்க்ரப் ஆனது சரும துளைகளில் மறைந்திருக்கும் மாசுக்களை அகற்ற உதவுகிறது.
Image Source: istock
குறிப்பிட்ட இந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு கோப்பையில் சேர்த்து நன்கு கரைத்து பின் சருமத்திற்கு அப்ளை செய்து குறைந்தது 5 நிமிடங்கள் வரை நன்கு ஸ்க்ரப் செய்து பின் 10 நிமிடங்கள் வரை உலர விடவும்.
Image Source: istock
10 நிமிடங்கள் கழித்த பின் சருமத்தில் உள்ள இந்த ஸ்க்ரப் துகல்களை பதமாக அகற்றி பின், குளிர்ந்த நீர் பயன்படுத்தி நன்கு சுத்தம் செய்துவிடவும்.
Image Source: pexels-com
ஃபேஷியலின் மூன்றாம் நிலையாக சருமத்திற்கு மசாஜ் கிரீம் அப்ளை செய்து பதமாக மசாஜ் செய்துவிடவும். இந்த ஜெல் தயார் செய்ய ஒரு ஸ்பூன் காப்பி பொடி, ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் தேவைப்படும்.
Image Source: istock
எடுத்துக்கொண்ட காப்பி பொடி, கற்றாழை ஜெல் ஆகியவற்றை நன்கு குழைத்துக்கொள்ள மசாஜ் கிரீம் ரெடி!. தயாராக உள்ள இந்த கிரீமினை தற்போது சருமத்திற்கு அப்ளை செய்து 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும்!
Image Source: istock
வாரம் இரண்டு முறை இவ்வாறாக நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சருமத்திற்கு ஃபேஷியல் செய்து வர சருமத்தில் உள்ள வெண்புள்ளி, கருந்திட்டுகள் மறைவதோடு பொலிவான சருமம் பெறலாம்!
Image Source: istock
Thanks For Reading!