[ad_1] இன்டர்வியூவில் சரியான சம்பளத்தை கேட்டுப்பெறுவது எப்படி?

Aug 13, 2024

இன்டர்வியூவில் சரியான சம்பளத்தை கேட்டுப்பெறுவது எப்படி?

Anoj

சரியான ஊதியம் பெறுவது

பெரும்பாலான இளைஞர்கள் அதிக திறன் இருந்தப்போதும், குறைவான சம்பளத்தில் வேலை செய்கின்றனர். அதற்கு முக்கிய காரணம், பணியில் சேர்கையில் சம்பளத்தில் பேரம் பேசினால் வேலை கிடைக்காது என்னும் அச்சம் ஆகும். இந்தப் பதிவில், சரியான சம்பளம் பெறுவது என்பதை இங்கு பார்க்கலாம்

Image Source: pexels-com

சம்பளம் பற்றி ஆராயுங்கள்

நீங்கள் சேரப்போகும் பணி, ஆபீஸ் லோக்கேஷன் மற்றும் அனுபவத்திற்கான சம்பள வரம்புகளை முதலில் தெரிந்துகொள்வது அவசியமாகும். இந்த தகவலை அறிய சில இணையதளங்களும் உள்ளன.

Image Source: pexels-com

ஆரம்பத்திலே கேட்க வேண்டாம்

நேர்காணலில் ஆரம்பத்தில் சம்பளத்தை பற்றி பேசுவதை தவிர்க்க செய்யுங்கள். உங்களுக்கான வேலை உறுதியான பிறகு அல்லது நேர்காணல் பைனல் கட்டத்திற்கு வந்தப்பிறகே சம்பள பேச்சை எடுக்க வேண்டும்

Image Source: istock

உங்களிடம் சம்பளம் எவ்வளவு வேண்டும் கேட்டால்?

இந்த கேள்விக்கு 20 ஆயிரம் வேணும், 30 ஆயிரம் வேணும் என உடனே சொல்லக்கூடாது. உங்க திறன், அனுபவம் போன்றவற்றை சுட்டிக்காட்டிவிட்டு, அதற்கு ஏற்ற சம்பளம் வழங்குமாறு கூறலாம்

Image Source: istock

சம்பள பேரத்திற்கான அளவை தீர்மானியுங்கள்

மனதில் சம்பள பேரத்திற்கான ஒரு அளவை தீர்மானித்து கொள்ளுங்கள். அப்போது தான், நேர்காணலில் சம்பள விஷயத்தில் திருப்தியின்மை இல்லாமல் ஒரு முடிவை எடுத்திட முடியும்.

Image Source: pexels-com

பிற பலன்களை பாருங்கள்

சம்பளத்தை தாண்டி அப்பணியின் கூடுதல் பலனங்களை பாருங்கள். போனஸ், மருத்துவ காப்பீடு, ஓய்வூதிய உதவி மற்றும் வொர்க் லைப் பேலன்ஸ் போன்றவை எப்படி இருக்கிறது என்பதை செக் செய்யவும்.

Image Source: pexels-com

தைரியமாக பேசுங்கள்

சம்பள உரையாடலில் தைரியமாக பேசுவது பற்றி முன்கூட்டியே பயிற்சி எடுத்துகொள்ளுங்கள். உங்க திறனுக்கான மதிப்பை சொல்வதில் உறுதியாக இருங்கள்.

Image Source: istock

குறைவான சம்பளம் சொன்னால்.,

ஒருவேளை 35 ஆயிரம் கேட்டு, 25 ஆயிரம் மட்டுமே தர முடியும் என்றால், உடனடியாக குறைந்து சம்பளத்தில் ஓகே சொல்லிவிடாதீர்கள். வேலைக்கான ஊதியத்தை நன்கு ஆராய்ந்திருக்கும் பட்சத்தில், ஆஃபரை ரிஜெக்ட் செய்திடவும் தயாராக இருக்க வேண்டும்

Image Source: pexels-com

ஆஃபர் கடிதத்தை செக் செய்யுங்கள்

வாய் வார்த்தையை தாண்டி, வேலைக்கான அழைப்பு கடிதத்தில் எல்லாக சரியாக இருக்கிறதா என்பதை செக் செய்யுங்கள். கைக்கு வரும் சம்பளம், எவ்வளவு பிடிக்கிறார்கள், Pf என அனைத்து விஷயங்களையும் நன்கு ஆராய்ந்துவிட்டு ஆஃபருக்கு சம்மதம் தெரிவியுங்கள்

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: படிப்பிற்காக புதிய நகரத்திற்குச் செல்கிறீர்களா? அப்போ இதை படிங்க!

[ad_2]