Jun 27, 2024
கிரிக்கெட் வீரர்களின் சமூக வலைத்தள கணக்கை கோடிக்கணக்கான மக்கள் பின்தொடருகின்றனர். அவர்களது கணக்கில் ஒரு போஸ்ட் போடுவதற்கே கோடிக்கணக்கான ரூபாய் வழங்கப்படுகிறது. அதன்படி, இன்ஸ்டாவில் அதிக வருவாய் ஈட்டும் வீரர்களை பற்றி இங்கு பார்க்கலாம்
Image Source: instagram-com/hardikpandya93
இன்ஸ்டாவில் அதிக வருவாய் ஈட்டும் இந்திய வீரராக விராட் கோலி திகழ்கிறார். அவரது கணக்கை 256 மில்லியனுக்கு அதிகமானோர் பின்தொடருகின்றனர். ஒரு பதிவுக்கு கிட்டத்தட்ட ரூ.14 கோடி சம்பாதிக்கிறார்
Image Source: instagram-com/virat-kohli
தல தோனி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இல்லாத பட்சத்திலும், அவரது கணக்கை 48 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடருகின்றனர். அவர் ஒரு பதிவுக்கு இந்திய மதிப்பில் ரூ.1.44 கோடி சம்பாதிக்கிறார்
Image Source: instagram-com
இன்ஸ்டாகிராம் சம்பாதிப்பவர்களின் உலகளாவிய டாப் 20 பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியர் எனும் பெருமைக்கு சொந்தக்காரர்
Image Source: instagram-com/virat-kohli
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ.76 லட்சம் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. அவரது கணக்கை 39 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடருகின்றனர்
Image Source: instagram-com/rohitsharma45
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கக்கூடியவர். அவரது கணக்கை 31 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்கின்றனர். அவர் ஒரு பதிவுக்கு ரூ. 65 லட்சம் சம்பாதிப்பதாக சொல்லப்படுகிறது
Image Source: instagram-com/hardikpandya93
தென்னாப்பிரிக்கா வீரர் ஏபி டி வில்லியர்ஸ்-ம் இன்ஸ்டாவில் அதிக வருவாய் ஈட்டும் நபராக திகழ்கிறார். 25 மில்லியன் மக்கள் பின்தொடரும் அவரது கணக்கில் ஒரு போஸ்ட் பகிர்வது மூலம் ரூ.58 லட்சம் சம்பாதிக்கிறார்
Image Source: instagram-com/abdevilliers17
சின்ன தல சுரேஷ் ரெய்னாவும், இன்ஸ்டாவில் நல்ல வருவாய் ஈட்டுவதாக சொல்லப்படுகிறது. அவரது கணக்கை 27 மில்லியன் மக்கள் பின்தொடருகின்றனர். அவர் ஒரு பதிவுக்கு ரூ.34 லட்சம் சம்பாதிப்பதாக தெரியவந்துள்ளது
Image Source: instagram-com/sureshraina3
இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் அதிக வருவாய் ஈட்டும் நபராக கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ திகழ்கிறார். அவரது கணக்கை 632 மில்லியன் மக்கள் பின்தொடருகின்றனர். அவர் ஒரு பதிவுக்கு இந்திய மதிப்பில் ரூ.26 கோடி பெறுவதாக கூறப்படுகிறது
Image Source: instagram-com/cristiano
Thanks For Reading!