Aug 12, 2024
200-க்கும் மேற்பட்ட தலைவலி வகைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வரிசையில் ஒன்று ‘Ice Pick தலைவலி’ - கணினியில் பணி செய்யும் இளையோரை அதிகம் பாதிக்கும் இந்த தலைவலி பற்றி சற்று விரிவாக இங்கு நாம் காணலாம்!
Image Source: istock
நம் உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் சிறிது நேரத்திற்கு ஐஸ் கட்டி வைக்கும்போது, குறிப்பிட்ட அந்த பகுதியில் கூச்சத்தின் கூடிய ஒரு வலி உணர்வு ஏற்படும். குறிப்பிட்ட இந்த வலி உணர்வு தலையில் (ஐஸ் கட்டி வைக்காத போதும்) உண்டாகும் நிலையில் அது ‘Ice Pick தலைவலி’ எனப்படுகிறது!
Image Source: istock
நிபுணர்கள் கூற்றுப்படி இந்த ‘Ice Pick தலைவலி’ ஆனது தலையில் ஊசியால் குற்றுவது போன்ற ஒரு வலியை உண்டாக்கும். எனினும், இந்த வலி அதிக நேரத்திற்கு நீடிக்காது - சிறிது காலத்திற்கு மட்டுமே நீடிக்கும்!
Image Source: pexles-com
‘Ice Pick தலைவலி’ எனும் இந்த விசித்திர தலைவலி ஏற்படுதன் முன்மை காரணமாக நரம்பியல் பிரச்சனை பார்க்கப்படுகிறது. மேலும், முன்னதாக ஏற்பட்ட காயம் - காயங்களின் பக்க விளைவாகவும் இந்த தலைவலி அதிகம் ஏற்படுகிறது!
Image Source: istock
குறிப்பிட்ட இந்த தலைவலி ஆனது கண்களில் சிவத்தல், மூக்கு ஒழுகுதல், முகத்தில் உள்ள தசைகள் இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வுடன் இருந்தால் இது சைனஸ் பிரச்சனையின் ஒரு அறிகுறியாகவும் இருக்கலாம்!
Image Source: istock
மூளை தொற்று ஏதும் இருப்பின் இந்த ‘Ice Pick தலைவலி’ ஏற்படும் வாய்ப்பு அதிகம் எனவும்; மூளை கட்டி, பக்கவாதம், தண்டுவட மரப்பு நோய் போன்ற பிரச்சனைகளும் இந்த ‘Ice Pick தலைவலி’-யை ஏற்படுத்தும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்!
Image Source: istock
இந்த ‘Ice Pick தலைவலி’ ஆனது ஒற்றைத் தலைவலி பிரச்சனையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், ஒற்றைத் தலைவலிக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் இந்த ‘Ice Pick தலைவலி’-க்கு பலன் அளிக்காது என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
Image Source: istock
‘Ice Pick தலைவலி’ ஆனது விரைவில் வந்த செல்லும் - அதாவது, சிறிது காலத்திற்கு வந்து செல்லும் - ஒரு தலைவலி வகை ஆகும். தலைவலிக்கான மருந்து, மாத்திரைகளை தேடுவதற்குள் இந்த தலைவலி மறைந்து போகும் வாய்ப்பு அதிகம்!
Image Source: istock
இந்த ‘Ice Pick தலைவலி’ ஆனது அடிக்கடி உண்டானால், சுய மருத்துவம் எடுத்துக்கொள்வதை தவிர்த்து மருத்துவரை சந்தித்து முறையான சிகிச்சை பெறுவது நல்லது. அலட்சியமாக இருப்பது, மூளை கட்டி, பக்கவாதம் உள்ளிட்ட ஆபத்துக்களை சந்திக்க காரணமாக அமையும்!
Image Source: istock
Thanks For Reading!