Jul 6, 2024
தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என்று அன்புடன் அழைக்கப்படும் கே. பாலசந்தர் அறிமுகம் செய்த டாப் தமிழ் சினிமா நடிகர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
Image Source: twitter-com
விவேக் தனது முதல் படமான மனதில் உறுதி வேண்டும் படத்தில் கே. பாலசந்தர் இயக்கத்தில் சிறு கதாபாத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் விவேக்கின் திரையுலக பயணம் தொடங்கி சின்னக் கலைவாணர் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.
Image Source: twitter-com
பிரகாஷ்ராஜ் 1994-ஆம் ஆண்டு கே. பாலசந்தரின் டூயட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பின்னர் வெற்றிகரமான நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் மாறினார்.
Image Source: twitter-com
1985 ஆம் ஆண்டு வெளியான கல்யாண அகதிகள் படத்தின் மூலம் துணை வேடத்தில் இயக்குநர் கே பாலசந்தர் இயக்கத்தில் நடிகர் நாசர் அறிமுகமானார். பின்னர் இவர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க வில்லன்களில் ஒருவராக மாறினார்.
Image Source: twitter-com
1971 ஆம் ஆண்டு வெளியான நவக்கிரகம் திரைப்படத்தில் இயக்குனர் கே.பாலசந்தர் ஒய்.ஜி.மகேந்திரனை நடிக்க வைத்தார். இதற்கு முன்னதாக மேடை நடிகராக இருந்த அவர் திரைப்படக் கலைஞரானது குறிப்பிடத்தக்கது.
Image Source: twitter-com
கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளியான மேஜர் சந்திரகாந்த் படத்தின் மூலம் நடிகர் சுந்தரராஜன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்திற்குப் பிறகு, அவர் "மேஜர்" சுந்தர்ராஜன் என்று பிரபலமாக அறியப்பட்டார்.
Image Source: twitter-com
1973 ஆம் ஆண்டு வெளியான கே பாலச்சந்தரின் அரங்கேற்றம் திரைப்படத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் தனது திரை பயணத்தில் நாயகனாக துவங்கினார். இதனை தொடர்ந்து கமல் ஹாசன் கே பாலச்சந்தர் இயக்கத்தில் 28 படங்களில் நடித்துள்ளார்.
Image Source: instagram-com
1975 ஆம் ஆண்டு கே பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்க ரஜினிகாந்த் நடிகராக அறிமுகமானார். பாலச்சந்தரின் தில்லு முல்லு திரைப்படத்திற்கு பிறகு ரஜினியின் திரைப்பயணம் பிரபலமானது.
Image Source: twitter-com
நடிகை சரிதா 1978-ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கிய மரோ சரித்ரா என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இவர் தனது சிறந்த நடிப்பிற்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார்.
Image Source: twitter-com
Thanks For Reading!