[ad_1] இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய நெல்லிக்காய் ஹேர் ஷாம்பூ

Jul 4, 2024

இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய நெல்லிக்காய் ஹேர் ஷாம்பூ

Nivetha

இயற்கையான ஷாம்பூ

தற்போதைய காலக்கட்டத்தில் பல்வேறு வகை ஹேர் ஷாம்பூக்கள் கிடைக்கிறது. எனினும் அதில் கெமிக்கல் கலக்கப்படுவதால் அது முடிக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. எனவே முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த வீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர் ஷாம்பூ செய்யலாம் வாருங்கள்.

Image Source: pexels

நெல்லிக்காய்

இந்த ஷாம்பூவில் நெல்லிக்காயை முதன்மையாக வைத்து செய்யப்படுகிறது. இது முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.

Image Source: pexels

தேவையான பொருட்கள்

துருவிய நெல்லிக்காய் 1 கப், ஷிகக்காய் தூள் 1 கப், பூந்திக்கொட்டை பொடி 1 கப், கற்றாழை ஜெல் 1 கப், 4 கப் தண்ணீர், 1/2 கப் ஆளிவிதை, 1/2 கப் கருஞ்சீரகம்.

Image Source: pixabay

செய்யும் முறை

ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி அதில் நாம் எடுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

Image Source: pixabay

கொதிக்க விடவும்

இந்த கலவையினை அடுப்பில் வைத்து சுமார் 10-15 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க விட்டு, கிளறி கொண்டே இருக்கவும்.

Image Source: pixabay

வடிக்கட்டி கொள்ளுங்கள்

அடுப்பில் இருந்து இறக்கி வைத்த ஷாம்பூ கலவையினை ஆறவிட்டு, பின்னர் அதில் திடப்பொருட்கள் இல்லாமல் வடிக்கட்டி எடுத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் நெல்லிக்காய் ஷாம்பூ தயார்.

Image Source: pixabay

சூரிய ஒளி

இந்த ஷாம்பூவை ஒரு பாட்டிலில் ஊற்றி சூரிய ஒளி படாத இடத்தில் வைத்து ஒரு வாரம் முதல் 2 வாரங்கள் வரை வைத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

Image Source: pexels

பூந்திக்கொட்டை நன்மைகள்

இந்த இயற்கை ஷாம்பூவில் கலக்கப்படும் பூந்திக்கொட்டை தலைமுடியை மிருதுவாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க உதவுவதோடு, பொடுகு பிரச்சனையை போக்கவும் போராடும் என்று கூறப்படுகிறது.

Image Source: pixabay

முடி உதிர்வை குறைக்கும்

இந்த ஷாம்பூவை பயன்படுத்துவதன் மூலம் முடியை வலுப்படுத்தி, வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. முடி உதிர்வினை குறைக்கவும் பயன்படும்.

Image Source: pexels

Thanks For Reading!

Next: தலைமுடியில் எண்ணெய் சரியாக வைக்கிறோமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

[ad_2]