[ad_1] இரட்டையர்களை கருவில் சுமக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!

இரட்டையர்களை கருவில் சுமக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!

Jul 2, 2024

By: mukesh M

கருவில் இரட்டையர்கள்?

இரட்டைக் குழந்தைகளை கருத்தரித்தல் மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும், கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒருசில பிரச்சனைகளையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில், இரட்டையர்களை கருவில் சுமக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்பது குறித்து இங்கு காணலாம்!

Image Source: pexels-com

காலையில் அதிக சோர்வு!

சாதாரணமாக கர்ப்பமாக இருப்பவர்களை விட இரட்டை கர்ப்பத்தை தடுத்திருப்பவர்கள் காலையில் அதிக சோர்வினை எதிர்கொள்கிறார்கள். சில நேரங்களில் நாள் முழுவதும் அதிக சோர்வு, வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகளை எதிர்கொள்கிறார்கள்.

Image Source: istock

நெஞ்செரிச்சல்!

சுமார் 17 சதவிகித முதல் 45 சதவீதம் வரையிலான பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இது பொதுவான ஒரு அறிகுறியாக இருந்தாலும் இரட்டை கர்ப்பத்தை தரித்திருக்கும் பெண்களுக்கு அதிக சௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

Image Source: istock

தூக்கமின்மை!

மூன்று மாத கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தூங்குவதற்கு சிரமமாக இருக்கும். குழந்தைகள் வளர தொடங்குவதால் எடை அதிகரிப்பு, வீக்கம், ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பிரச்சனைகள் தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது.

Image Source: istock

உடல் எடை அதிகரிப்பு!

இரட்டை குழந்தைகளை கருத்தரித்திருக்கும் பெண்களுக்கு குழந்தைகளின் எடை மற்றும் கருப்பை வளர்ச்சியின் காரணமாக உடல் எடை அதிகரிக்கலாம். அதிக உடல் எடை அதிகரிப்பு உடலில் ஆற்றலை குறைக்கிறது.

Image Source: istock

குறை மாத பிரசவம்!

இரட்டைக் குழந்தைகளை கருத்தரித்திருக்கும் பெண்களில் குறை பிரசவம் என்பது சற்று அதிகமாக உள்ளது. குறைபிரசவம் தாய் மற்றும் சேய் என இருவருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அதிக மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது.

Image Source: istock

தழும்புகள்!

இரட்டைக் குழந்தைகள் வளரும் போது கருப்பை விரிவடைகிறது. இதனால் கர்ப்பிணி பெண்களின் தோல்களில் நீட்சி ஏற்பட்டு சருமத்தின் நிறம் மாறுபடுகிறது. இதனால் வயிற்றுப் பகுதி, மார்பகங்கள், தொடை பகுதி போன்றவற்றில் வரி தழும்புகள் ஏற்படுகிறது.

Image Source: istock

வீக்கம்!

இரட்டைக் குழந்தைகளை கருத்தரித்திருக்கும் பெண்களில் வீக்கம் மற்றும் எடை அதிகரிப்பு என்பது பொதுவான அறிகுறியாக உள்ளது. இது பெண்களில் கார்பல் டன்னல் சிண்ட்ரோம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.

Image Source: istock

வலிகள்!

பொதுவாக இரட்டை குழந்தைகளை சுமக்கும் பெண்களுக்கு கால் பிடிப்புகள், முதுகு வலி, தலைவலி, எலும்புகளில் வலி போன்றவை அதிக அளவில் உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் கருப்பையில் இருப்பதால் கருப்பை பெரிதாகவும் நரம்பு மற்றும் தசைகள் போன்றவற்றில் அதிக அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

Image Source: istock

Thanks For Reading!

Next: உங்கள் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்களா? என்ன காரணம் தெரியுமா?

[ad_2]