Jun 4, 2024
By: mukesh Mஇரட்டையர்களை பெற்றெடுப்பது என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு புது வித அனுபவம் ஆகும். இந்நிலையில், இரட்டைக் குழந்தைகளை கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை பெண்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன என்று இங்கு காணலாம்.
Image Source: istock
வயது மூத்த பெண்கள் கருத்தரிப்பது கடினம் என்றாலும் 30-லிருந்து 40 வயது உட்பட்டவர்கள் கருத்தரிக்கும் போது அது இரட்டைக் குழந்தைகளாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். அண்டவெடிப்பின் சுழற்சிகள் இந்த வயதுகளில் சீராக இருக்காது என்பதால் இரட்டைக் குழந்தைகளை கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளது.
Image Source: istock
இரட்டைக் குழந்தைகளை கருத்தரித்தலில் பிறப்பு குறைபாடுகளை தடுப்பதற்கு போலிக் அமிலம் அத்தியாவசியம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். போலிக் அமிலம் குறைபாடு குழந்தைகளில் நரம்பு குழாய் பிறப்பு குறைபாட்டினை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
Image Source: istock
இரட்டை குழந்தையை கருத்தரித்திருக்கும் போது அடிக்கடி மருத்துவரை சந்திக்க வேண்டி வரலாம். இரட்டைக் குழந்தைகளின் வளர்ச்சியை குறித்து அடிக்கடி சோதிக்க வேண்டி இருப்பதால் வாரத்துக்கு இருமுறை கருவின் வளர்ச்சி குறித்து பரிசோதனைகள் செய்யவது நல்லது!
Image Source: pexels-com
இரட்டைக் குழந்தைகளை கருத்தரித்திருக்கும் பெண்களுக்கு காலை நேரங்களில் அதிக சோர்வு ஏற்படலாம். ஹார்மோனின் அளவு அதிகமாக இருப்பதால் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளும் இருக்கும்.மேலும் முதுகு வலி, தூங்குவதில் சிரமம், நெடுஞ்செரிச்சல் போன்றவை இருக்கலாம்.
Image Source: istock
இரட்டைக் குழந்தைகளில் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இது மிகவும் பொதுவான ஒரு பிரச்சனையாக உள்ளது. உங்களுக்கு மூன்று மாதங்களில் திட்டுதிட்டாக ரத்தப்போக்கு பிரச்சனை இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.
Image Source: istock
இரட்டைக் குழந்தைகளை கருத்தரித்திருக்கும் போது 18 முதல் 20 வாரங்களில் கரு அசைவுகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். கரு அசைவில் மாற்றங்கள் இருந்தால் (அ) அசைவுகளை உணர முடியாமல் இருந்தால் மருத்துவ உதவியை நாடுவது அவசியம்.
Image Source: istock
இரட்டைக் குழந்தைகளை கருத்தரித்து இருக்கும் போது உடல் எடை அதிகமாக இருக்கும். இது போன்ற கருத்தரித்தலில் இவை பொதுவானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனால் இதைக் குறித்து நீங்கள் கவலைபட தேவையில்லை.
Image Source: istock
இரட்டைக் குழந்தைகளை கருத்தரித்தலில் 36 முதல் 37 வது வாரங்களில் பிரசவம் நடைபெறுகிறது. 34 வாரங்களுக்கு பிறகு இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் அவை ஆரோக்கியமாக இருக்கும். குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் சில நாட்களுக்கு வைக்கப்படலாம்.
Image Source: istock
Thanks For Reading!