Jul 3, 2024
By: mukesh Mஒரே மாதிரியாக உருவம் கொண்ட இரட்டையர்கள் ஒரு சில நேரத்தில் உருவம், பாலினம், குணங்கள் மற்றும் பல காரணிகளால் வகைபடுத்தப்படுகின்றனர். இரட்டையர்கள் மத்தியில் காணப்படும் இந்த சிறு வேறுபாடுகள் என்ன? இரட்டை குழந்தைகளின் வகைகள் என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: pexels-com
மரபணு ரீதியாக ஒரு சிலருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கிறது. தற்காலத்தில் IVF சிகிச்சை முறை காரணமாகவும் இரட்டைக் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இரட்டை கருமுட்டைகளை ஒரே நேரத்தில் செலுத்துவதால் இது போன்ற கருத்தரிப்புகள் உருவாகின்றன.
Image Source: pexels-com
கருவுற்ற முட்டை இரண்டு குழந்தைகளாக பிரிவதால் இரட்டை கருத்தரிப்பு ஏற்படுகிறது. ஒரே முட்டை விந்தணுவை பகிரும்போது ஒரே பாலினத்தில் பிள்ளைகள் பிறக்கிறார்கள். இவர்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்டிருப்பார்கள்.
Image Source: pexels-com
இரண்டு தனி தனி முட்டைகள் வெவ்வேறு விந்தணுக்களால் கரு உருவாகும்போது, கரு இரண்டு ஆண் குழந்தைகளாக உருவாகிறது. குடும்ப வரலாறு மற்றும் கரு உருவாவதற்கு சிகிச்சைகள் மேற்கொள்ளும் போது இரட்டை ஆண் பிள்ளைகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.
Image Source: pexels-com
இரு உடல் ஒன்றாக இணைந்த பிறக்கும் இரட்டை பிள்ளைகளை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இது மிகவும் அரிதான நிகழ்வு. மாற்றான் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்த பாத்திரத்தை இங்கு நாம் நினைவு கூறலாம்!
Image Source: pexels-com
இரட்டைக் குழந்தைகளில் ஒருவருக்கு உடல் வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கும். இது ஒட்டுண்ணி வகையை சார்ந்தது என மருத்துவ உலகில் கூறப்படுகிறது. கருவுறுதல் சிகிச்சைகள் (அ) மரபியல் காரணங்களால் இப்பிரச்சனை உண்டாக கூடும்!
Image Source: pexels-com
ஒரே மாதிரி உருவம் கொண்ட இரட்டையர்களை மிரர் இமேஜ் இரட்டையர்கள் என அழைக்கலாம். ஒரு சில வேறுபாடுகளை கொண்டிருந்தாலும் எளிதில் அடையாளம் காண முடியாத படி உருவ ஒற்றுமை கொண்டிருப்பார்கள்.
Image Source: pexels-com
இரட்டைப் பிள்ளைகள் என்றாலே ஒரே மாதிரியான உருவம் கொண்டிருப்பார்கள் என்ற மாயை உள்ளது. ஆனால் இரட்டை பிள்ளைகள் வெவ்வேற மாதிரியான உருவங்களையும் கொண்டு பிறக்கிறார்கள். இவர்களை இரட்டை பிள்ளைகள் என்று அடையாளம் கூற முடியாது.
Image Source: pexels-com
பெரும்பாலும் இயற்கையான முறையில் இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கு குடும்ப வரலாறு காரணமாக உள்ளது. தாய் வழி குடும்பத்தில் இரட்டை குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகமாக இருந்தால் அது தொடர்ந்து பரம்பரை பரம்பரையாக இரட்டை குழந்தை பிறப்புக்கு வழிவகுக்கிறது.
Image Source: pexels-com
Thanks For Reading!