Jul 11, 2024
By: mukesh Mகர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் உடல் எடையில் மாற்றம் காண்பது இயல்பான ஒன்றாக இருக்கும் நிலையில், முதல் பிரசவத்தை காட்டிலும் இரண்டாவது பிரசவத்தில் பெண்கள் ஒரு சிலர் கூடுதல் எடையை சந்திப்பது எதனால்? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
முதல் பிரவத்தில் போது அதிகரித்த எடை குறைவதற்கு போதுமான கால அவகாசம் தேவைப்படும் நிலையில், குறுகிய கால இடைவெளிக்குள் தங்கள் இரண்டாவது பிரசவத்தை திட்டமிடும் பெண்கள் இந்த கூடுதல் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.
Image Source: istock
கர்ப்ப காலத்தில் பெண்கள் உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள், அவர்களின் எடை மேலாண்மையை பாதிப்பது இயல்பான ஒன்று தான். இந்த இயல்பான விஷயம், முதல் பிரசவத்தின் தாக்கத்துடன் இரண்டாம் பிரசவத்தில் சற்று கூடுதலாக இருக்கும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்!
Image Source: istock
முதல் பிரசவத்திற்கு பின் பெண்களின் கருப்பை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவது இல்லை. இதன் விளைவாக கர்ப்பிணிகளின் வயிற்றின் அளவு (எடை) சற்று அதிகமாக இருப்பது போன்று காட்சியளிக்கிறது.
Image Source: istock
முதல் பிரசவத்தின் போது தளர்வடையும் அடிவயிற்று தசைகள், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்குள் இரண்டாம் குழந்தைக்கு திட்டமிடுவது, கருவை சுமப்பதில் சிரமங்களை உண்டாக்குகிறது. இந்த சிரமங்கள் அடிவயிற்று இறக்கத்தை உண்டாக்குவதோடு, உடல் எடை அதிகமாக இருப்பது போன்றும் தோன்றுகிறது!
Image Source: istock
இரண்டாம் கர்ப்ப காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் இந்த உடல் பருமன் ஆனது, பிரசவகால சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். குறிப்பாக, முதல் பிரசவத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு ஆபத்தான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது!
Image Source: istock
நொறுக்கு தீனிகளை தவிர்த்து ஆரோக்கிய உணவு வழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த இரண்டாம் கர்ப்ப காலத்தில் உண்டாகும் உடல் எடை அதிகரிப்பை ஓரளவுக்கு சமாளிக்கலாம்.
Image Source: istock
இதேப்போன்று எளிய உடற்பயிற்சி, யோகாசனம் போன்ற உடல் இயக்கங்களை உறுதி செய்து உடலில் தேங்கும் கூடுதல் கொலஸ்ட்ரால்களை கரைத்து ஆரோக்கிய உடல் எடையை பராமரிக்கலாம்.
Image Source: pexels-com
முதல் பிரசவத்திற்கும் - இரண்டாவது பிரசவத்திற்கும் இடையில் போதுமான கால இடைவெளியை அளிப்பது அவசியம். நிபுணர்கள் கூற்றுப்படி குறைந்தது 18 மாத கால அவகாசம் அளிப்பது இந்த எடை அதிகரிப்பு பிரச்சனையை தடுக்க உதவும்!
Image Source: istock
Thanks For Reading!