Anoj, Samayam Tamil
Jul 27, 2024
நடிகை பிரணிதா சுபாஷ் தனது பேன்ட் பத்தவில்லை என்கிற போட்டோவை வெளியிட்டு 2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம்
Image Source: instagram-com/pranitha-insta
பெங்களூருவில் 1992 அக்டோபர் 17ம் தேதி சுபாஷ் - ஜெயஸ்ரீ தம்பதிக்கு மகளாக பிறந்தார் பிரணிதா. இவரது பெற்றோர் இருவரும் மருத்துவர்கள் ஆவார். பிரணிதா, அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் Professional & Leadership Development பாடப்பிரிவில் பட்டம் பெற்றுள்ளார்
Image Source: instagram-com/pranitha-insta
2010ல் Porki திரைப்படத்தின் மூலம் கன்னடத் திரையுலகில் ப்ரணிதா அறிமுகமானார். இது 2006ல் தெலுங்கில் வெளியான போக்கிரி படத்தின் ரீமேக் ஆகும். முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, திரைத்துறையில் பிரணிதாவுக்கு வரவேற்பு அதிகமானது
Image Source: instagram-com/pranitha-insta
கன்னடம், தெலுங்கில் கலக்கிய பிரணிதா, அடுத்து கோலிவுட்டில் கால்பதித்தார். உதயன், சகுனி, மாஸ் போன்ற படங்களில் லீட் ரோலில் நடித்துள்ளார்
Image Source: instagram-com/pranitha-insta
நகைக்கடை, துணிக்கடை மற்றும் கல்வி நிறுவனங்களின் பிராண்ட தூதராக பிரணிதா பணியாற்றியுள்ளார். 2013ல் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரில் Karnataka Bulldozers அணியின் பிராண்ட் தூதராகவும் இருந்தார்
Image Source: instagram-com/pranitha-insta
நடிப்பு மட்டுமின்றி சிறந்த தொழிலதிபராகவும் பிரணிதா வலம்வருகிறார். hospitality நிறுவனத்தில் சில பங்குகளை வாங்கிய பிரணிதா, தற்போது பெங்களூருவில் சொந்தமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்
Image Source: instagram-com/pranitha-insta
சமூக சேவைகளில் அதிக ஆர்வம் கொண்டுள்ள பிரணிதா, கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் இருக்கும் அரசு பள்ளியை தத்தெடுத்தது மட்டுமின்றி நிதியுதவியும் அளித்தார். தன்னார்வ தொண்டு திட்டத்தின் பேரில் அப்பள்ளியில் 7ம் வகுப்பு ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றினார்
Image Source: instagram-com/pranitha-insta
2021ம் ஆண்டு தொழிலதிபர் நிதின் ராஜூ என்பவரை பிரணிதா திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு 2022ல் பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், 2024ல் மீண்டும் கர்ப்பமாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
Image Source: instagram-com/pranitha-insta
பிரணிதா உடலை ஃபிட்டாக வைத்திருக்க தினமும் யோகா பயிற்சியில் ஈடுபடக்கூடியவர். நீரேற்றத்தை பராமரிப்பதோடு ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிடக்கூடியவர். இவரது இன்ஸ்டா பக்கத்தை 6 மில்லியனுக்கு அதிகமானோர் பின்தொடர செய்கின்றனர்
Image Source: instagram-com/pranitha-insta
Thanks For Reading!