Jun 19, 2024
இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்களை பாதிக்கும் நோய்களில் ஒன்று நீரிழிவு நோய் என கூறலாம். இது இதயம், இரத்த நாளங்கள், கண்கள், சிறுநீரகங்கள் என உடல் உறுப்புகளை சேதப்படுத்தும் ஒரு தீவிர பாதிப்பு ஆகும்.
Image Source: istock
Lemongrass புல்லின் வகையை சேர்ந்த ஒரு தாவரம். ஆயுர்வேத மருத்துவத்தில் இது முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இந்த எலுமிச்சை புல்லில் பல மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளதால் இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது.
Image Source: istock
எலுமிச்சை புல்லில் இருந்து தயாரிக்கப்படும் டீ (அ) ஜூஸ் போன்றவற்றை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
Image Source: istock
எலுமிச்சை புல்லில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளை சரி செய்து மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
Image Source: istock
எலுமிச்சை புல்லில் இருந்து வரும் நறுமணம் ஒருவரின் மனதை அமைதிப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. இதனால் மன அழுத்தம், பதட்டம் ,கவலை போன்ற பிரச்சனைகள் குறைந்து மன அமைதி கிடைக்கிறது.
Image Source: pexels-com
எலுமிச்சை புல்லில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. எனவே தினசரி உங்கள் உணவில் இந்த எலும்சிச்சை புல்லை டீ (அ) ஜூஸ் வடிவில் சேர்த்துக் கொள்ள நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
Image Source: istock
சர்க்கரை நோயாளிகள் தினசரி எலுமிச்சை புல் டீ எடுத்துக்கொள்ள இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இது ஒரு அருமருந்தாகும்.
Image Source: istock
எலுமிச்சை புல்லில் வைட்டமின் சி, பொட்டாசியம், தாதுக்கள் என பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்து சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
Image Source: istock
எலுமிச்சை புல் டீ (அ) ஜூஸினை தினசரி குடித்து வருபவர்களின் உடலில் வளர்ச்சிதை மாற்றம் அதிகரித்து செரிமான பாதிப்புகள் சரி செய்யப்படுகிறது. இதனால் உடல் எடை கூடாமல் இருக்க இது உதவுகிறது.
Image Source: istock
Thanks For Reading!