May 21, 2024
ஐஸ்கிரீம் அனைவருக்கும் பிடித்தமான உணவாகும். அதில் சேர்க்கப்படும் கலவைகள், உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் உதவுகின்றன. ஆனால், அதனை இரவு நேரத்தில் சாப்பிடுவதால் வரும் பிரச்சனைகளை இங்கு பார்க்கலாம்
Image Source: freepik-com
ஐஸ்கிரீம்மில் சர்க்கரை உள்ளடக்கம் அதிகமாக உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து, இரவில் அசெளகரியத்தை உண்டாக்க வாய்ப்புள்ளது. இதனால், தூக்க சுழற்சி கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது
Image Source: istock
ஐஸ்கிரீம்மில் கலோரி மற்றும் கொழுப்பு உள்ளடக்கம் உள்ளது. அதனை இரவு நேரத்தில் சாப்பிடுகையில், உடல் கலோரிகளை எரித்திட போதுமான நேரம் கிடைக்காமல் போகலாம். இது நாளடைவில் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்
Image Source: istock
ஐஸ்கிரீம்மில் பால் தயாரிப்புகள் இருக்கக்கூடும். இது சிலருக்கு ஜீரணிக்க கடினமாக இருக்கலாம். குறிப்பாக, லாக்டோஸ் சகிப்புத்தன்மை இருப்பவர்கள் கடும் சிரமத்தை சந்திப்பார்கள். இரவு நேரத்தில் சாப்பிடுவது தூங்கும் போது வயிற்று அசெளகரியத்தை உண்டாக்க வாய்ப்புள்ளது
Image Source: istock
ஐஸ்கிரீம்மில் காணப்படும் அதிக கொழுப்பு உள்ளடக்கம், அசிடிட்டி அறிகுறிகளை தூண்ட வாய்ப்புள்ளது. குறிப்பாக, தூங்கும் போது அதன் அறிகுறிகள் மோசமாக இருக்கக்கூடும். நெஞ்செரிச்சல் மற்றும் தொண்டையில் எரியும் உணர்வையும் சந்திக்க நேரிடும்
Image Source: istock
ஐஸ்கிரீம்மில் காணப்படும் அதிக சர்க்கரை உள்ளடக்கம், ரத்த சர்க்கரை அளவில் திடீர் ஏற்றத்திற்கு வழிவகுக்கும். இதனால், ரத்த சர்க்கரை அளவின் சமநிலை பாதிக்கப்பட்டு பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்
Image Source: istock
ஐஸ்கிரீம்மின் சர்க்கரை இருப்பதால், உடலின் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், இரவு நேரங்களில் வியர்ப்பது அதிகரிக்கக்கூடும். இது தூக்கத்தை பாதிப்பதோடு மிகவும் வசதி இல்லாத வகையில் உணர வைத்திடும்
Image Source: istock
பல் சிதைவு மற்றும் மஞ்சள் கறை போன்ற பிரச்சனைகளையும் ஐஸ்கிரீம் உண்டாக்க செய்யலாம். அதனை தூங்கும் முன் இரவு நேரத்தில் சாப்பிடுவது வாய் தொடர்பான பிரச்சனைகளை மோசமாக்க செய்யலாம்
Image Source: istock
இரவு நேரத்தில் இனிப்பு சாப்பிட ஆசை வந்தால், பழங்கள், காய்கறிகள் மற்றும் சர்க்கரை குறைவான இனிப்புகளை சாப்பிட செய்யலாம். ஐஸ்கிரீம் இரவு நேரத்தில் சாப்பிட மோசமான தேர்வாக கருதப்படுகிறது
Image Source: pexels-com
Thanks For Reading!