[ad_1] இரவில் தூங்கும் போது உடல் சூடாவது எதனால் தெரியுமா?

Jul 17, 2024

இரவில் தூங்கும் போது உடல் சூடாவது எதனால் தெரியுமா?

mukesh M

உறக்கத்தின் போது உடல் சூடு!

நம்மில் ஒரு சிலர் இரவு உறக்கத்தின் போது உடல் திடீரென உஷ்ணமடைவதை உணர்ந்திருக்கலாம். தூக்கத்திற்கு இடையில் இவ்வாறு உடல் சூடாவது ஏன்? இதனை தடுக்கும் வழிகள் என்ன? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்!

Image Source: istock

ஹார்மோன் மாற்றங்கள்!

பெரும்பாலும் பெண்களை குறிவைக்கும் இந்த ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனை ஆனது, மாதவிடாய் நிறுத்த காலத்தில் உண்டாகிறது. இதேப்போன்று தங்களின் கர்ப்ப காலத்திலும் பெண்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்வது உண்டு!

Image Source: istock

உடல் நல பிரச்சனைகள்!

நாளமில்லா சுரப்பிகள் தொடர்பான பிரச்சனை (தைராய்டு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சன) கொண்டவர்களுக்கும் இந்த இரவு நேர உடல் சூடு பிரச்சனை இயல்பான ஒன்றாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Image Source: istock

மருந்துகளின் பக்க விளைவு!

உடல் நல பிரச்சனைகளுக்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்து - மாத்திரைகள் ஒரு சில நேரம், நம் உடலுக்குள் விணை புரிந்து தூக்கத்திற்கு இடையில் உடல் சூட்டை அதிகரிக்கிறது!

Image Source: pexels-com

டீ - காபி நுகர்வு!

இரவு உறக்கத்திற்கு முன் காஃபின் நிறைந்த டீ, காபி போன்ற பானங்களை பருகுவது நம் நரம்பு மண்டல தூண்டலுக்கு வழிவகுக்கிறது. இந்த தூண்டல் ஆனது, உடல் சூடு மட்டும் அல்லாது பல்வேறு மாற்றங்களையும் நம் உடலில் உண்டாக்குகிறது!

Image Source: istock

ஆல்கஹால்!

பியர், ஒயின், ஸ்பிரிட் உள்ளிட்ட ஆல்கஹால் நிறைந்த மதுபானங்களின் நுகர்வு ஆனது உடலில் நீரிழப்பை உண்டாக்க கூடும். இந்த நீரிழிப்பு ஆனது, இரவு உறக்கத்தின் போது உடல் சூடாக இருப்பது போன்ற உணர்வுக்கு வழிவகுக்க கூடும்!

Image Source: istock

அறை வெப்பநிலை!

இரவு உறக்கத்திற்கு இடையில் உண்டாகும் உடல் சூட்டிற்கு சுற்றுச்சூழல் ஒரு மிக முக்கிய காரணமாக அமைகிறது. அந்த வகையில் அறையில் வெப்பநிலை, நாம் உடுத்தும் ஆடைகள், காற்றோட்ட நிலை போன்ற பல்வேறு காரணிகள் இந்த உடல் சூட்டிற்கு வழிவகுக்கிறது.

Image Source: istock

தடுப்பது எப்படி?

இரவு நேரத்தில் உண்டாகும் இந்த உடல் சூட்டை தவிர்க்க, இரவு உறங்க செல்வதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. மேலும், டீ - காபி, ஆல்கஹால் உள்ளிட்ட பானங்களை தவிர்ப்பது நல்லது!

Image Source: istock

மருத்து உதவி நாடுங்கள்!

ஹார்மோன் பிரச்சனை, நாளமில்லா சுரப்பி தொடர்பான பிரச்சனைகள் காரணமாக உண்டாகும் உடல் சூட்டு பிரச்சனையை சமாளிக்க, மருத்துவரின் வழிகாட்டுதலை பின்பற்றுவது நல்லது!

Image Source: istock

Thanks For Reading!

Next: எந்த காய்கறிகளில் 'மூளை புழுக்கள்' இருக்கும் தெரியுமா?

[ad_2]