May 11, 2024
தூங்கும் முன் பால் குடிப்பது தூக்க தரத்தை மேம்படுத்த உதவும். பாலில் தூக்கத்தை தூண்டும் serotonin, melatonin ஹார்மோன்களின் செயல்திறனை கொண்டிருக்கும் tryptophan உள்ளது. இது தூக்கத்தை கெடுக்கும் சர்க்கரை மற்றும் காஃபின் பானங்களுக்கு சிறந்த மாற்றாகும்
Image Source: istock
பாலில் புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் உள்ளன. அவற்றை தூங்கும் முன் குடிப்பது, வயிறு முழுமையான உணர்வை தரக்கூடும். இதனால், மிட் நைட் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது, அதிகமாக சாப்பிடுவது மற்றும் அதிகப்படியான கலோரி நுகர்வு குறையக்கூடும்
Image Source: istock
உடலில் கால்சியம் நுகர்வை அதிகரிக்க, பால் குடிப்பது சிறந்த வழியாகும். இதுதவிர, வைட்டமின் டி சத்து நிறைந்துள்ளது. அவை உடலில் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்த செய்கிறது. இதன் காரணமாக, எலும்புகள் நோய் பாதிப்பின்றி வலிமையாக இருக்கக்கூடும்
Image Source: istock
தினமும் இரவு பால் குடிக்கையில், சருமத்திற்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அதிலுள்ள வைட்டமின் பி12 உள்ளடக்கம், சரும நெகிழ்வுத்தன்மை மற்றும் கொலாஜன் உற்பத்தியை தூண்டி இளமை தோற்றத்தை அளிக்கிறது.
Image Source: pexels-com
இரவில் 1 கிளாஸ் பால் குடித்துவிட்டு தூங்கினால், காலையில் எழுந்திருக்கையில் மிகவும் புத்துணர்ச்சியாக காணப்படுவோர். அன்றைய தினசரி பணிகளை எளிதாக முடிக்கலாம் என்கிற ஆற்றலை பாலின் சத்துக்கள் தர செய்கிறது
Image Source: pexels-com
மன அழுத்தத்தை போக்க இரவில் பால் குடிப்பது சிறந்த முடிவாகும். பாலில் உள்ள சத்துக்கள், மன அழுத்ததிற்கு காரணமான கார்டிசோல் ஹார்மோன் அளவை குறைத்து மனநிலையை மேம்படுத்துகிறது.
Image Source: istock
கொழுப்பு இல்லாத பாலை இரவு குடிப்பது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவக்கூடும். பாலில் உள்ள புரதங்கள் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது. பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள், இதய ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும்
Image Source: istock
கால்சியம் நிறைந்த குளிர்ந்த பாலை இரவில் பருகுவது, அதிகப்படியான வயிற்று அமிலத்தை உறிஞ்சுவது மூலம் அசிடிட்டி போன்ற அசெளகரியங்களை போக்க செய்கிறது. தொடர்ச்சியான பால் நுகர்வு, அல்சரில் இருந்து நிவாரணம் கிடைக்கவும் உதவும்
Image Source: istock
அடிக்கடி சளி மற்றும் இருமலால் அவதிப்படுபவர்கள், இரவில் வெதுவெதுப்பான பாலை குடிக்க செய்யலாம். பாலுடன் சிறிதளவு மஞ்சள் மற்றும் கடுகு சேர்த்து பருகினால், அதன் அறிகுறிகள் விரைவில் நீங்கக்கூடும்
Image Source: istock
Thanks For Reading!