Jun 20, 2024
யோகாசனம் எனப்படுவது நம் மனம் மற்றும் உடலை ஒரு நிலைப்படுத்தும் ஒரு உடற்பயிற்சி ஆகும். உடல் அளவிலும் - மனதளவிலும் நம் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் ஒரு பயிற்சியாக இது பார்க்கப்படுகிறது.
Image Source: pexels-com
மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் காக்கும் இந்த யோகா பயிற்சியினை இரவு உணவுக்கு பின் செய்வது நல்லதா? இரவு நேரத்தில் யோகாசனம் செய்வதன் நன்மை - தீமை என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
நிபுணர்கள் கூற்றுப்படி இரவு உணவுக்கு பின் ஒரு சில யோகாசனங்களை செய்வது, சீரான குடல் இயக்கத்தை உறுதி செய்து செரிமான செயல்பாட்டை மேம்படுத்துகிறது. எனவே, இரவு உணவுக்கு பின் நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஒரு சில ஆசனங்களை செய்யலாம்!
Image Source: istock
பாதங்களை பின்னோக்கி மடித்து, பாதங்களுக்கு மேல் அமரும் இந்த ஆசனம் ஆனது சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்வதோடு, குடல் இயக்கத்தை மேம்படுத்தி, செரிமான செயல்பாட்டை ஒழுங்குப்படுத்துகிறது.
Image Source: istock
படுத்த நிலையில் செய்யும் ஒரு யோகாசனம் என்பதால், அதிக உடல் உழைப்பு இன்றி இதனை நாம் செய்யலாம். குறித்த இந்த ஆசனம் ஆனது, முதுகெலும்பின் வலிமையை உறுதி செய்வதோடு, சீரான செரிமானத்திற்கும் உதவுகிறது.
Image Source: istock
படுத்த நிலையில் கைகள் மற்றும் கால்களை மேல்நோக்கி உயர்த்தும் ஒரு வகை ஆசனம். இந்த ஆசனம் ஆனது குடல் பகுதியில் அழுத்தங்களை உண்டாக்கி, சீரான குடல் இயக்கத்தை உறுதி செய்ய உதவுகிறது.
Image Source: istock
குடல் இயக்கத்தை மேம்படுத்துவதோடு தோள்பட்ட, முதுகு வலி பிரச்சனைகளையும் போக்கி ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும் ஒரு யோகாசனம்!
Image Source: istock
பாலம் போல் முதுகை வலைக்கும் ஒரு ஆசனம். முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மையை உறுதி செய்வதோடு, குடல் இயக்கத்தையும் மேம்படுத்தி, சீரான செரிமான செயல்பாட்டை உறுதி செய்கிறது!
Image Source: istock
தனி நபரின் உடல் நிலை பொறுத்து இந்த யோகாசனங்களின் பலன் மாறுபடும் என்பதால், உங்கள் உடல் நல ஆலோசகரின் பரிந்துரைக்கு பின் இந்த ஆசனங்களை முயற்சிப்பது நல்லது!
Image Source: istock
Thanks For Reading!