Jun 6, 2024
இந்தியாவில் பதிவாகும் மாரடைப்பு வழக்குகளில் 57% இரவு நேரத்தில் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த இரவு நேர மாரடைப்பிற்கான காரணம் என்ன? இதை தடுப்பது எப்படி? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
இரவு நேர மாரடைப்பிற்கு நம் வாழ்க்கை முறை முக்கிய காரணமாக அமைகிறது. குறிப்பாக இரவு நேர உணவு முறை, தமனிகளில் கொலஸ்ட்ரால் தேக்கத்திற்கு வழிவகுத்து, மாரடைப்பு - இதய செயலிழப்புக்கு வழிவகுக்கிறது.
Image Source: istock
இரவு உணவிற்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். கொழுப்பு நிறைந்த கடின உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது!
Image Source: istock
இரவு நேரத்தில் லீன் புரதம் நிறைந்த உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை போதுமான அளவு எடுத்துக்கொள்வது நல்லது. குறிப்பாக, எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது!
Image Source: istock
இரவு உணவிற்கு பின் கடுமையான உடற்பயிற்சி செய்வது சுவாச குழாயை அழுத்தத்திற்கு வழிவகுத்து, இதய ஆரோக்கியத்தை பாதிக்க கூடும். எனவே, இரவு உணவிற்கு பின் எளிய நடைப்பயிற்சி போதுமானது.
Image Source: istock
ஆய்வுகளின் படி இரவு மன உலைச்சலுடன் உறங்க செல்லும் நபர்களையே இந்த மாரடைப்பு பிரச்சனை தாக்குகிறது. எனவே, மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும் காரணிகளை தவிர்ப்பது நல்லது!
Image Source: istock
இரவு உணவு ஆரோக்கியமான ஒன்றாக இருப்பதோடு, போதுமான அளவு தண்ணீர் பருகுவதும் அவசியம். அந்த வகையில், ஆரோக்கியமான உணவுடன் போதுமான அளவு தண்ணீர் பருகுவதையும் வழக்கமாக்குங்கள்.
Image Source: pexels-com
இரவு உணவை இரவு 8 மணிக்குள் முடித்துவிடுவது நல்லது. காலம் கடந்து இரவு உணவு எடுத்துக்கொள்வது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதோடு, மூச்சுத்திணறல், மாரடைப்பு உண்டாவதன் வாய்ப்பையும் அதிகரிக்கும்.
Image Source: istock
இரவு உணவிற்கும் - இரவு உறக்கத்திற்கும் இடையில் குறைந்தது 2 மணி நேரம் இடைவெளி விடுவது அவசியம். உண்டவுடன் உறங்க செல்வது கொலஸ்ட்ரால் தேக்கத்திற்கு வழிவகுப்பதோடு, மாரடைப்பு அபாயத்தையும் அதிகரிக்கும்!
Image Source: istock
Thanks For Reading!