May 19, 2024
மாம்பழத்தில் கலோரி, நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருந்தாலும், அதனை இரவு நேரத்தில் சாப்பிடும் போது உடலில் நிகழும் மாற்றங்களை இங்கு பார்க்கலாம்
Image Source: pexels-com
இரவில் மாம்பழம் சாப்பிடுவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் என நம்பப்படுகிறது. அதிலுள்ள வைட்டமின் பி6, உடலில் தூக்கத்தை தூண்டும் மெலடோனின் ஹார்மோன் பயன்பாட்டிற்கு உதவுகிறது. இது உடலையும், மனதையும் அமைதிப்படுத்தக்கூடும்
Image Source: istock
மாம்பழத்தின் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், சளியை குறைக்கவும், இருமலை போக்கவும் பயனுள்ளதாக இருக்கும். இரவு நேரத்தில் சாப்பிடுகையில் சுவாச குழாயில் நெரிசலை சரிசெய்து, சுவாசிப்பதில் சிரமம் உண்டாகுவதை குறைக்க உதவுகிறது
Image Source: istock
மாம்பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. அதன் முக்கியமான 2 சத்துக்கள், ரத்த அழுத்தத்தை பராமரித்து இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்க செய்கிறது
Image Source: istock
மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி உள்ளடக்கம், சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும். இதுதவிர, கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், புற ஊதா கதிர்வீச்சு தாக்குதலை சமாளிக்கவும் உதவுகிறது
Image Source: istock
மாம்பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது கார்னியாவின் மேற்பரப்பைப் பாதுகாப்பதோடு கண் பார்வை திறனை மேம்படுத்த செய்கிறது. மேலும், கண்களில் வறட்சி உண்டாகுவதை தடுக்கக்கூடும்
Image Source: istock
தினசரி உணவு முறையில் மாம்பழம் சேர்ப்பது, உடலுக்கு தேவையான வைட்டமின் சி நுகர்வை உறுதி செய்கிறது. உடலில் வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதோடு உடலை பல நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்
Image Source: istock
மாம்பழத்தில் உள்ள அதிக நார்ச்சத்து, இரைப்பை குடல் பிரச்சனைகள் மற்றும் செரிமானம் தொடர்பான பிற நோய் அபாயத்தை குறைக்கிறது. இதுதவிர, அதிலுள்ள செரிமான என்சைம், இரவு நேரத்தில் உண்டாகும் வயிற்று அசெளகரியங்களை குறைக்கக்கூடும்
Image Source: istock
மாம்பழத்தை மிதமான நேரத்தில் சாப்பிடுவது, எடை இழப்புக்கு உதவி செய்கிறது. அதன் நார்ச்சத்து, பசியை குறைத்து, அதிகமாக சாப்பிடுவதை தடுக்கக்கூடும். மேலும், மாம்பழத்தின் இயற்கை சர்க்கரை உள்ளடக்கம், உடல் எடையை அதிகரிக்கும் இனிப்பு மோகத்தை தீர்க்கக்கூடும்
Image Source: istock
Thanks For Reading!