Jul 20, 2024
By: Nivethaஇந்திய சமையலறையில் பல ஆண்டுகளாக இரும்பு பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இது நீண்ட நேரம் மற்றும் நிலையான சூட்டினை விநியோகிக்கும் திறன் கொண்டுள்ளது. ஆனால் இதனை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.
Image Source: istock
இரும்பு பாத்திரங்களை முறையாக பராமரிக்கவில்லை என்றால் இரும்பு பாத்திரங்கள் சேதமடைய துவங்கும். அல்லது அதில் சமைக்கும் உணவின் சுவையில் மாற்றம் ஏற்படும். எனவே இரும்பு பாத்திரங்களை பயன்படுத்தும் பொழுது செய்ய கூடாத விஷயங்கள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
Image Source: istock
இரும்பு பாத்திரங்களை சரியாக பராமரிக்கவில்லை என்றால் அது துரு பிடிக்க துவங்கும். அதனால் இரும்பு பாத்திரங்களை பயன்படுத்திய பிறகு வெந்நீரில் கழுவி நன்கு உலர விட வேண்டும். உலர்ந்த பிறகு அதில் தேங்காய் எண்ணெய் தேய்த்து வைத்தால் துரு பிடிப்பதை தவிர்க்கலாம்.
Image Source: istock
இரும்பு பாத்திரத்தில் லெமன், தக்காளி, வினிகர் போன்ற அமில உணவுகளை சமைக்க கூடாது. ஏனெனில் இது போன்ற அமில உணவுகள் இரும்போடு சேரும் பொழுது வேதிவினை ஏற்பட்டு பாத்திரத்திலுள்ள உணவில் உலோக சுவை ஏற்படக்கூடும்.
Image Source: istock
இரும்பு பாத்திரங்கள் அதிக நேரம் சூட்டை தக்க வைத்து கொள்ளும் தன்மை கொண்டது. எனவே இதில் அதிக நேரம் சமைத்தால் அது அடிபிடிக்கவோ, கருகி போகவோ வாய்ப்புள்ளது. அதனால் குறைவான அளவில் தீயினை வைத்து அடிக்கடி கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
Image Source: istock
இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் பொழுது உலோக கரண்டிகளை பயன்படுத்த கூடாது. இவ்வாறு பயன்படுத்தும் பொழுது உலோக கரண்டி பாத்திரத்தில் கீறி சேதப்படுத்தும். எனவே, இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் பொழுது மரம் அல்லது பிளாஸ்டிக் கரண்டிகளை தான் பயன்படுத்த வேண்டும்.
Image Source: pexels
இரும்பு பாத்திரங்களை மைக்ரோவேவ் அடுப்பில் வைத்து சமைக்க கூடாது. ஏனெனில் அதிக வெப்பம் இரும்பு பாத்திரங்களை சேதப்படுத்துவதோடு, உணவின் தரத்தினை மோசமாக்கி உடலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
Image Source: Samayam Tamil
தற்போதைய அவசர உலகத்தில் இரும்பு பாத்திரங்கள், அலுமினிய பாத்திரங்கள் உள்ளிட்டவைகளில் சமைப்பதே குறைந்து வருகிறது. ஆனால் நமது பாரம்பரிய முறைப்படி சமைப்பது தான் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.
Image Source: istock
இந்த பதிவில் கூறப்பட்டுள்ள தவறுகளை தவிர்த்து இரும்பு பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் முழுவதும் மேம்படுவதோடு சுவையான உணவையும் நம்மால் பெற முடியும். ஆரோக்கியமாக சமைத்து சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்க பாரம்பரிய முறைப்படி சமைத்து சாப்பிடுவது ஒன்றே வழியாகும்.
Image Source: istock
Thanks For Reading!