[ad_1] இலங்கை போறீங்களா? 7 days என்ஜாய் பண்ண சூப்பர் டிப்ஸ்!

Apr 29, 2024

இலங்கை போறீங்களா? 7 days என்ஜாய் பண்ண சூப்பர் டிப்ஸ்!

Anoj

இலங்கை சுற்றுலா

வளமான வரலாறு, பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகள், தனித்துவமான கலாச்சாரம் என சுற்றுலா வாசிகளை கவரும் இலங்கை நாட்டில் 7 நாட்களை ஜாலியாக கொண்டாடுவது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்

Image Source: unsplash-com

கொழும்பு

முதல் நகரில் இலங்கை தலைநகர் கொழும்புவை சுற்றி பாருங்கள். கங்காராமையா கோவில், விஹாரமகா தேவி பூங்கா, கொழும்பு மியூசியம் ஆகியவை கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள். மேலும், இலங்கை உள்ளூர் உணவுகளை ருசிக்கும் வாய்ப்பும் தவறவிடக்கூடாது

Image Source: unsplash-com

கண்டி

2ம் நாளில், 3 மணி நேர தூரத்தில் அமைந்துள்ள கண்டி நகருக்கு செல்லலாம். அங்கு யுனேஸ்கா பாதுகாக்கும் Sacred Tooth Relic கோயில் மற்றும் ஜெம் மியூசியம் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும். மாலையில் கண்டி ஏரியில் பாரம்பரிய kandyan நடனமும் கண்டு ரசிக்கலாம்

Image Source: instagram-com/wondersof_ceylon

நுவரெலியா

3வது நாளில், கண்டியில் இருந்து 75 கி.மீ., தொலைவில் லிட்டில் இங்கிலாந்து என்கிற நுவரெலியா செல்லலாம். தேயிலை தோட்டங்கள், ஹக்கலா தாவரவியல் பூங்கா ஆகியவற்றை பார்த்துவிட்டு, Gregory ஏரியில் படகு சவாரியில் ஈடுபடலாம்

Image Source: unsplash-com

எல்லா

4ம் நாளில், 54 கி.மீ., தொலைவில் உள்ள எல்லாவுக்கு செல்லலாம். அங்குள்ள லிட்டில் ஆடம்ஸ் சிகரத்தின் மலையேற்ற முடிவில் சிறந்த காட்சியை காணலாம். இதுதவிர, இலங்கை பேமஸ் Nine Arch Bridge-ல் ரயில் செல்வது மற்றும் ராவணா நீர்வீழ்ச்சி ஆகியவை பார்க்க வேண்டிய இடங்களாகும்

Image Source: unsplash-com

யாலா தேசிய பூங்கா

இது வனப்பிரியர்களுக்கு ஏற்ற இடமாகும். எல்லாவில் இருந்து 75 கி.மீ தொலைவில் உள்ளது. 5ம் நாளை யானைகள், சிறுத்தைகள் மற்றும் அரிய வகை பறவைகளுடன் செலவிடலாம். பூங்காவில் நேச்சர் வாக் மற்றும் சஃபாரி ரைடும் ஈடுபடலாம்

Image Source: instagram-com/visit-srilanka-__

உனவடுனா

6ம் நாளை, இலங்கையின் பாப்புலரான கடற்கரை நகரங்களில் செலவிட செய்யுங்கள். உனவடுனா, மிரிஸ்ஸா, வெலிகம போன்ற இடங்களில் கடல் அழகை ரசிப்பதோடு ஏராளமான நீர் விளையாட்டுகளில் ஈடுபட செய்யலாம்

Image Source: unsplash-com

காலி

இலங்கையின் வரலாற்றை அறிய காலி கோட்டை சிறந்த இடமாகும். இது கடற்கரை நகரங்களுக்கு அருகில் தான் அமைந்துள்ளது. 6ம் நாளில் மாலை நேரத்தில் இந்த கோட்டையை விசிட் அடிக்க திட்டமிட செய்யலாம். லைட் ஹவுஸ், Maritime மியூசியம் போன்றவற்றை பார்க்கலாம்

Image Source: unsplash-com

கொழும்பு ஷாப்பிங்

ட்ரிப்பின் கடைசி நாளில், மீண்டும் கொழும்பு செல்கையில், ஷாப்பிங்கில் ஈடுபடலாம். இலங்கையின் கைவிணை பொருட்களை ட்ரிப் நினைவாக வாங்கி செல்லலாம். இலங்கைக்கு டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் செல்வது சிறந்த முடிவாகும்

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: மக்கள் கூட்டத்தில் தத்தளிக்கும் 'இரவு சந்தைகள்' ஒருமுறை கட்டாயம் போங்க!

[ad_2]